அரசுத் தேர்வுகளுக்கான 'நோக்கம்' செயலி அறிமுகம் / NOKKAM APP FOR COMPETITIVE EXAM
TNPSCSHOUTERSFebruary 23, 2023
0
அரசுத் தேர்வுகளுக்கான 'நோக்கம்' செயலி அறிமுகம் / NOKKAM APP FOR COMPETITIVE EXAM: அரசு போட்டித் தேர்வுகளுக்கென்று அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி சாா்பில் 'நோக்கம்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி சாா்பில் அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் 'எய்ம் டிஎன்' என்ற யூடியுப் சேனல் தொடங்கப்பட்டு அதில் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
இதன்தொடா்ச்சியாக போட்டித் தேர்வுகளுக்கென்று 'செயலி' ஒன்றையும் இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது.
'நோக்கம்' என்ற இந்தச் செயலியின் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி), தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் (டிஎன்யுஎஸ்ஆா்பி), மத்திய அரசுப் பணியாளா் தோவாணையம் (எஸ்எஸ்சி), வங்கிப் பணியாளா் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்), யுபிஎஸ்சி போன்ற அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தினமும் பதிவேற்றப்படும் பயிற்சிக்கான காணொலிகளையும், பாடக் குறிப்புகளையும் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
மேலும், ஒவ்வொரு பாடத்திலும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும். இந்தச் செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.