Type Here to Get Search Results !

8th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ரெப்போ வட்டி 6வது முறையாக உயர்வு - ரிசர்வ் வங்கி முடிவு
  • ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. 
  • இந்த வகையில், நடப்பு மாதத்துக்கான கூட்டம் கடந்த 6ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் துவங்கியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
  • இதன்படி, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவீதம் அதிகரித்து 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் 4 பேர் வட்டி உயர்வுக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இது முடிவு செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
  • பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ரெப்போ வட்டி யை ரிசர்வ் வங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான மாத தவணை (இஎம்ஐ) அதிகரித்து வருகிறது. 
  • ஏற்கெனவே பெரும்பாலான வங்கிகளில் கடன் வட்டி 9 சதவீதத்தை தாண்டியுள்ள நிலையில், கடன் தவணை செலுத்துவோருக்கு மேற்கண்ட முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் 2023-24 நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பண வீக்கம் வரும் நிதியாண்டில் தற்போதைய சராசரி அளவான 6.5 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
புதுமைப்பெண் இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாட்டில் 1,04,347 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
  • பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. 
  • அதன்படி 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தொடங்கப்பட்ட புதுமை பெண் திட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
‘மிகச் சிறந்த ஏடிடி விருதினை’ என்டிபிசி தொடர்ந்து 6-வது ஆண்டாக பெறுகிறது
  • நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின் உற்பத்திக் கழகம் தேசிய அனல்மின் உற்பத்தி கழகம் (என்டிபிசி), அமெரிக்காவில் உள்ள திறன் மேம்பாட்டுக்கான சங்கத்தால் (ஏடிடி) மிகச் சிறந்த ஏடிடி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
  • திறன் வளர்ச்சிப் பிரிவில் வெற்றிகரமாக செயல்பட்டதற்காக என்டிபிசி நிறுவனம் 6-வது முறையாக இந்த விருதினை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் பெரிய தனியார், அரசு, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • அமெரிக்காவில் உள்ள திறன் வளர்ச்சிக்கான சங்கம், உலகிலேயே மிகப்பெரிய சங்கமாகும். கற்பித்தல் மற்றும் வளர்ச்சியை அங்கீகரிக்கும் விதமாக பலராலும் விரும்பபடுகின்ற விருதாக ஏடிடி சிறப்பு விருது உள்ளது.
ஜி20 சுற்றுலாப் பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் தொடக்க அமர்வு குஜராத் மாநிலம் கட்ச் பாலைவனப் பகுதியில் நடைபெற்றது
  • ஜி20 சுற்றுலாப் பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் தொடக்க அமர்வு குஜராத் மாநிலம் கட்ச் பாலைவனப் பகுதியில் நடைபெற்றது.
  • தொடக்க அமர்வில் இந்தியா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் தொடக்கக் குறிப்புகளுடன், மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன்ரெட்டி, மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel