Type Here to Get Search Results !

6th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கம்
  • 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3-வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 
  • துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த நிலையில் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் கப்பலில் முதல் போர் விமானம் தரையிறக்கம்
  • முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விமானம் தாங்கி போர்க் கப்பல் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது.
  • இந்த நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
  • ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்ட 45,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. 
  • 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட விக்ராந்த் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாகும். இதில், 30 விமானங்களை கொண்டு செல்ல முடியும்.
அம்ரூத் 2.0 மூலம் புவியியல் தகவல் கட்டுப்பாட்டு நிலையம் - ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் அனைத்து கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் முன்னேற்றத்தை மேன்மை செய்வதற்காக அம்ருத் 2.0 திட்டத்தின் நிர்வாகம் மற்றும் அலுவலக செலவு திட்டத்தின் கீழ் சிந்தாரிப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க ரூ.17.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசாணை வெளியீட்டு உள்ளார்.
  • இந்த திட்டத்தின் மூலம் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டமைப்பில் தகவல்கள் உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் மற்றும் உருவாக்கப்பட்ட தகவல்கள் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் சேர்க்கப்படும் இவ்வாறு சேர்க்கப்பட்ட தகவல்களைக் கொண்டு பணிகளை திட்டமிடல், பொது சேவை வசதி அன்றாட தகவல்களை மேம்படுத்த இயலும். இத்திட்டத்தின் செயலாக்கம் வாரியத்தின் வருவாய் மேம்படுத்தவும் செலவினங்களை குறைக்கவும் ஏதுவாக அமையும்
3 கிராமி விருது பெற்ற முதல் இந்தியர் ரிக்கி கெஜ்
  • அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 65-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த பாப்-ராக் பாரம்பரிய இசை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. 
  • அந்த வரிசையில் நேற்று தொடங்கிய விருது வழங்கும் விழாவில் பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ரிக்கி கெஜ்-க்கு மூன்றவது முறையாக கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • இவர் வெளியிட்ட டிவைன் டைட்ஸ் என்ற பாடல் தொகுப்புக்கு இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே ஆல்பத்திற்காக சிறந்த புதிய ஆல்பம் பிரிவில் விருதை வென்றிருந்தார். 
  • நடப்பாண்டு சிறந்து ஆழ்ந்து ஒலிக்கும் ஆடியோ ஆல்பம் என்ற பிரிவில் ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
  • பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ஐ பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து உருவாக்கப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தின் சீருடைகளையும் பிரதமர் வெளியிட்டார். 
  • இந்திய எண்ணெய் கழகத்தின் உட்புற சூரிய எரிசக்தி சமையல் முறையின் இரட்டை அடுப்பு மாதிரியையும் நாட்டுக்கு அர்ப்பணித்த அவர் இதன் வணிக ரீதியான விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
  • எத்தனால் கலக்கும் திட்டத்தின் கீழ் 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 84 சில்லறை விற்பனை பெட்ரோல் நிலையங்களில் இ-20 எரிபொருளையும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். பசுமை எரிசக்தி ஆதாரங்கள் மூலம் இயங்கும் வாகனங்களுடன் பசுமைப் போக்குவரத்து பேரணியை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது பசுமை எரிபொருள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.
  • இந்த நிகழ்வில் கர்நாடக ஆளுநர் திரு.தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை, மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை இணை அமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் அதிகரித்து வரும் சக்தியை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பிப்ரவரி,6 முதல் 8 வரை இந்தியா எரிசக்தி வாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • எரிசக்தி பரிமாற்றத்திற்கு பொறுப்பான நாட்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்க மரபு சார்ந்த மற்றும் மரபு சாராத எரிசக்தி தொழில் துறையில், அரசுகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்துக் கொண்டு வரும். 
  • உலகம் முழுவதிலுமிருந்து 30க்கும் அதிகமான அமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள். இந்திய எரிசக்தியின் எதிர்காலம் பற்றிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, 500 உரையாளர்களும், 1000 கண்காட்சி ஏற்பாட்டாளர்களும், 30,000 பிரதிநிதிகளும் விவாதிப்பார்கள்.
தும்கூரில் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
  • தும்கூரில் ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  •  இதேபோல், தும்கூர் தொழிற்பேட்டை, திப்தூர் மற்றும் சிக்கநாயகனஹள்ளியில் 2 ஜல்ஜீவன் இயக்கத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 
  • தொடர்ந்து ஹெலிகாப்டர் தொழிற்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட பிரதமர், இலகு ரக ஹெலிகாப்டரையும் திறந்துவைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு நாராயணசாமி, கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • பாதுகாப்புத்துறையில், தற்சார்பை அடையும் மற்றொரு நடவடிக்கையாக தும்கூருவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெல்காப்டர் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • கடந்த 2016-ஆம் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பசுமை ஹெலிகாப்டர் தொழிற்சாலை மூலம் ஹெலிகாப்டர்களின் உற்பத்தித் திறன் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படையும். 
  • இது ஆசியாவின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையாகும். அடுத்த 20 ஆண்டுகளில், தும்கூருவில், 3 முதல் 15 டன் தரம் உடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் தேசிய டிஜிட்டல் அணுகுமுறையை உருவாக்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • பசுமை இந்தியா இலக்கை அடைய ஏதுவாக தனியார் பங்களிப்புடன் தேசிய அளவிலான டிஜிட்டல் அணுகுமுறையை உருவாக்குவதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • விவசாயம், தோட்டக்கலை, மீன்வளர்ப்பு, கால்நடைப் பராமரிப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான இயக்கங்கள் மூலம் ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகளை வழங்க ஏதுவாக டிஜிட்டல் நூலகத்தை அமைக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel