விமானப்படை அதிகாரிக்கு 'பரம் விசிஷ்ட் சேவா' விருது
- நாட்டின் குடியரசு தினத்தன்று, ராணுவம், கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஜனாதிபதியின் உயரிய பரம் விசிஷ்ட் சேவா விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
- இதன்படி, டில்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பை கவனித்து வரும், தமிழகத்தைச் சேர்ந்த ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமி அனந்தராமனுக்கு, பரம் விசிஷ்ட் சேவா விருது வழங்கப்பட்டது. இவர், 1985 ஜூன் 14ல் விமானப் படையில் சேர்ந்தார்.
- அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை உயரம் தாண்டுதல் பந்தயம் நடைபெற்றது.
- இதில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கா் 2.26 மீ. உயரம் குதித்து தங்கம் வென்றாா். உலக சாம்பியனும், காமன்வெல்த் தங்கப்பதக்க வீரருமான பஹாமஸின் டொனால்ட் தாமஸை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றாா்.
- டொனால்ட் 2.23 மீ உயரம் குதித்தாா். அமெரிக்காவின் டேரில் சல்லிவன் 2.19 மீ. குதித்து வெண்கலம் வென்றாா். கடந்த 2022 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா் தேஜஸ்வின்.
- ரோஷியா தலைநகர் ஜாக்ரெப் நகரில் நடைபெற்ற ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவில் கிரோக்கோ-ரோமன் பிரிவு ஆட்டத்தில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் அஷு.
- ஆடவர் பிரிவில் 67 கிலோ எடைப் பிரிவில் லிதுவேனியாவின் Adomas Grigaliunas என்ற எதிரணி வீரரை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார் அஷு.
- 23 வயதான அஷு வெண்கலம் வென்றதன் மூலம், இந்தியாவின் வெண்கலப் பதக்க கணக்கு 2 ஆகியுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு போட்டியில், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சமந்தா ஸ்டீவர்ட், பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆசிய சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற கனடா வீராங்கனை சுஷ்மா ஷோக்கீனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
- ஜெய்ப்பூர் மகாகேல் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். விழாவில் கபடி போட்டியையும் அவர் பார்வையிட்டார்.
- ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினரான திரு ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 2017 ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் மகாகேல் விழாவை நடத்தி வருகிறார்.