22nd FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
6 வயது முடிந்த பிறகே முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
- புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
- குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயது வரை மூளை வளரும் பருவம் என்பதால் கல்வி கற்பிப்பதை 6 வயதுக்குப் பின்னரே துவங்க வேண்டும் என்ற ஆய்வறிஞர்களின் பரிந்துரைப்படி, புதிய கல்விக் கொள்கையில் 1-ம் வகுப்பில் சேர 6 வயது பூர்த்தியாகி இருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த தொலைநோக்குப் பார்வையை எட்ட கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், பள்ளிக் கல்வியில் முதல் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை வயதை 6 க்கு மேல் மாற்றியமைக்க வேண்டும்.
- 3 முதல் 6 வயது வரை மழலையர் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைப்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும், நர்சரி பள்ளிகளில் 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும், என்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
- பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. அதன்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார்.
- மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஒபராய் 150 வாக்குகளையும், பாஜகவின் ரேகா குப்தா 116 வாக்குகளையும் பெற்றனர். இதனையடுத்து டெல்லி மேயராக ஷெல்லி ஒபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2003ல் இங்கிலாந்து அணியில் அறிமுகமான ஆண்டர்சன், 6வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். இதன் மூலமாக 1936ல் ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் கிளாரி கிரிமெட் 40 வயதில் முதலிடம் பிடித்து படைத்த சாதனையை ஆண்டர்சன் (40 வயது, 207 நாள்) சமன் செய்துள்ளார்.
- அவர் இதுவரை 178 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 682 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
- சட்டம் இயற்ற வேண்டிய விவகாரங்கள் மற்றும் சட்ட சீர்த்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய சட்ட ஆணையம் குறிப்பிட்ட கால இடைவெளியில் அமைக்கப்படுவது வழக்கம்.
- சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2022ம் ஆண்டு 22வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது.
- இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளார்.
- இந்திய அரசுக்கும் கயானா அரசுக்கும் இடையே விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகள் நிறைவடைந்ததாக தூதரக அளவிலான அறிவிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட்டதும் இது அமலுக்கு வரும்.
- 2012-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கயானாவில் வசிக்கும் மக்களில் 40 சதவீதத்தினர், இந்தியர்கள். இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை திட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
- விமான சந்தையின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் விமான துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாராளமயமாக்கல் போன்ற முன்னேற்றங்களின் காரணமாக சர்வதேச விமான இணைப்பை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் விமான சேவைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகின்றன. தற்போது இந்தியா மற்றும் கயானா அரசுகளுக்கு இடையே விமான சேவைகள் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை.
- இந்தியாவிற்கும் கயானாவிற்கும் இடையிலான புதிய விமான சேவைகள் ஒப்பந்தம், இருநாட்டு விமானங்களுக்கு வணிக வாய்ப்புகளை வழங்குவதுடன், மேம்பட்ட மற்றும் தடையற்ற இணைப்புக்கான சூழலையும் உருவாக்கும்.
- சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான சிகாகோ மாநாட்டு ஒப்பந்தம் 1944ல் பிரிவு 3 பிஐஎஸ், பிரிவு 50 (ஏ) மற்றும் பிரிவு 56 ஆகிய மூன்று நெறிமுறைகளை அங்கீகரிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- சிகாகோ மாநாட்டில் வரையறுக்கப்பட்ட பிரிவுகள் சம்பந்தப்பட்ட நாடுகளில் கடமைகள் மற்றும் முன்னுரிமைகளை எடுத்துக் கூறியுள்ளன. அத்துடன், சர்வதேச விமானப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் அமைப்பான ஐசிஏஓ-வின் தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நிலையான நடைமுறைகளை ஏற்று செயல்படுவதை சிகாகோ மாநாட்டின் விதிமுறைப் பிரிவுகள் ஊக்குவிக்கின்றன.
- கடந்த 78 ஆண்டுகளில் சிகாகோ மாநாட்டு ஒப்பந்தப் பிரிவுகள் சிலமுறை திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியா அவ்வப்போது இந்தத் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
- தற்போது சிகாகோ மாநாட்டின் ஒப்பந்தத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சிகாகோ மாநாட்டு ஒப்பந்தம் 1944ல் பிரிவு 3பிஐஎஸ்-ஐ சேர்ப்பதற்கான நெறிமுறை, உறுப்பு நாடுகள் சிவில் விமானங்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை தடுப்பது குறித்து எடுத்துரைக்கிறது. (இது 1984 மே மாதத்தில் கையெழுத்தானது)
- சர்வதேச விமானம் அமைப்பின் (ஐசிஏஓ) பலத்தை 36 லிருந்து 40 ஆக உயர்த்த சிகாகோ ஒப்பந்தம் 1944ல் பிரிவு 50(ஏ) ஐ திருத்துவதற்கான நெறிமுறை எடுத்துரைக்கிறது. (இது 2016 அக்டோபர் மாதத்தில் கையெழுத்தானது)
- விமான செலுத்துதல் ஆணையத்தின் பலத்தை 18லிருந்து 21 ஆக உயர்த்துவதை சிகாகோ ஒப்பந்தத்தின் 56வது பிரிவின் திருத்தம் எடுத்துரைக்கிறது. (இது 2016 அக்டோபர் மாதத்தில் கையெழுத்தானது)
- இந்த ஒப்புதல் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான மாநாட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளில் இந்தியா உறுதியுடன் உள்ளதை எடுத்துரைப்பதாக அமையும். இந்த ஒப்புதல் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான அம்சங்களில் இந்தியா அதிக பங்கேற்பை அளிக்க சிறந்த வாய்ப்புகளை வழங்கும்
- பிரதமர் திரு. நரேந்திர மோடி 41 வது பிரகதி கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
- முனைப்பான நிர்வாகம் மற்றும் குறித்த காலத்தில் அமலாக்கம் செய்தல் என்ற தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பன்னோக்குத் தளமான பிரகதியில் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
- 13 மாநிலங்களில் மேற்கொற்ள்ளப்பட்டு வரும் ரூ.41,500 கோடி மதிப்பிலான 9 முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
- சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 3 திட்டங்கள், ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம், சுகாதாரம் ஆகிய அமைச்சகங்கள் சார்பில் தலா ஒரு திட்டம் ஆகியவைக் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
- இந்தத் திட்டங்கள் தமிழ்நாடு, பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற பிரகதி கூட்டங்களில் ரூ.15.82 லட்சம் மதிப்பிலான 328 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
- கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு தகவல் தொகுப்பு மையம் - இந்தியப் பெருங்கடல் பகுதி, செஷல்சில் உள்ள பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம், இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இதன் விளைவாக இந்த இரண்டு மையங்களுக்கு இடையே கடலோரப்பகுதிகள் குறித்த விழிப்புணர்வு, தகவல் பகிர்தல் மற்றும் துறை சார்ந்த நிபுணர் பங்களிப்பின் மேம்பாடு போன்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
- இந்திய கப்பற்படையின் கீழ் இயங்கும் இந்தியப் பெருங்கடல் பகுதி, பிராந்திய கூட்டு நடவடிக்கை மையத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குருகிராமில் தொடங்கியது.
- இந்தியப் பெருங்கடல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கடலோரப் பாதுகாப்புக் கட்டமைப்பின் பணிகளை பிராந்திய கூட்டு நடவடிக்கை மையம் மற்றும் இது தொடர்பாக அதிகாரம் பெற்ற 7 நாடுகளின் தேசிய மையங்கள் ஆகியவைகள் இணைந்து செயலாற்றும்.
- 1981-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய பரமேஸ்வரன், பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
- 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையில் அனுபவம் கொண்டவர். இவர் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்து வந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள உலக வங்கி தலைமையகத்தின் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். இவர் 3 ஆண்டுகள் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார்.
- தற்போது நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக 1987-ம் ஆண்டு பேட்ச் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பி.வி.ஆர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.