20th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிதிஆயோக் புதிய சிஇஓ பிவிஆர் சுப்பிரமணியம்
- நிதி ஆயோக் புதிய சிஇஓவாக பிவிஆர் சுப்பிரமணியம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நியமிக்கப்பட்டார்.
- 2 ஆண்டுகள் பணி நியமனம் செய்யப்பட்ட அவர் தற்போது உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியில் அவர் 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.
- இதை அடுத்து நிதிஆயோக் அமைப்பின் புதிய சிஇஓவாக ஆந்திராவை சேர்ந்த பிவிஆர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் அயர்லாந்து மகளிர் அணியுடன் குரூப் போட்டியில் விளையாடி வருகிறது.
- இந்த போட்டியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்துள்ளார். இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையையும் இதன் மூலம் ஹர்மன்ப்ரீத் முறியடித்துள்ளார்.
- இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தா 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிவர்களில் 150 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் ஹர்மன்ப்ரீத் கௌரும், 148 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் ரோகித் சர்மாவும், 143 போட்டிகளில் விளையாடி 3வது இடத்தில் சுசி பட்டேலும் உள்ளனர்.
- இந்திய ராணுவத்துக்கும் உஸ்பெகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான ‘டஸ்ட்லிக்’ என்னும் நான்காவது கூட்டு ராணுவப்பயிற்சி உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் தொடங்கியது. இரு நாடுகளையும் சேர்ந்த தலா 45 வீரர்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உறவுகளை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கார்வால் ரைபிள்ஸ் பிரிவில் இருந்து வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
- இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது பயிற்சி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது.
- 14 நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப்பயிற்சி மலைப்பகுதிகள் மற்றும் சிறுநகரப் பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கூட்டுப்பயிற்சியில் விவாதங்கள், குறைகள், செயல்முறை விளக்கங்கள் ஆகியவை நடைபெறும். புதிய தலைமுறைத் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் கையாள்வது தொடர்பான நடவடிக்கைகளில் இருநாட்டு ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். படைகளுக்கு இடையே இயங்கும் தன்மையை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.