19th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் இருந்து காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.
- இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆணந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர்.
- இதில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கை கோள்களின் தரவுகளை சேகரிப்ப தற்காகவும் அனுப்பப்படுகிறது.
- இன்று விண்ணில் செலுத்த ப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.நா. சபை சார்பில் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறுதானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு கடந்த ஜன.1-ம் தேதி அறிவித்தது.
- இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பெங்கால் முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா, முதல் இன்னிங்சில் 404 ரன் குவித்தது.
- இதைத் தொடர்ந்து, 230 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி 241 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா 2.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து வென்று 2வது முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டது. உனத்கட் ஆட்ட நாயகன் விருதும், இந்த தொடரில் மொத்தம் 907 ரன் குவித்த அர்பித் வாசவதா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் வீழ்த்திய 7 விக்கெட்களில் 5 விக்கெட்களை 'போல்டு' செய்வதன் (பந்துமூலம் ஸ்டம்பைச் சாய்த்தல்) மூலம் பெற்றுள்ளார்.
- இதற்கு முன்பு இந்திய அணி வீரரான சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே இதுபோன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செய்து அந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
- அவர், கடந்த 1992ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக, ஜோகனஸ்பர்கில், 'போல்டு' செய்வதன் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில், தேசிய உடல்உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் (என்ஓடிடிஓ) அறிவியல் உரையாடல் 2023 மாநாடு இன்று புதுதில்லியில் நடைபெற்றது. உயிர்களைப் பாதுகாப்பதற்காக, உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேயில், “ஷிவ் சிருஷ்டி” என்ற சிவாஜி மஹராஜின் வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கிய பூங்காவின் முதல் கட்டத்தை இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
- விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, சுதந்திரப் போராட்டத்தில், சிவாஜி மஹராஜின் உன்னதப் பங்களிப்புக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார்.
- சிவாஜி மஹராஜின் பிறந்தநாளையொட்டித் திறக்கப்பட்ட இந்த பூங்காவை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கடுகிறது.