18th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 'ஓலா' நிறுவனத்துடன் ஒப்பந்தம்
- ஓலா எலெக்ட்ரிக் மொபிலிடி நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ், ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜீஸ் மூலமாக முதல் கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின்வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது.
- இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.7,614 கோடி. இதில், ஓலா செல் டெக்னாலஜீஸ் ரூ.5,114 கோடியும், ஓலா எலெக்ட்ரிக் டெக்னாலஜீஸ் ரூ.2,500 கோடியும் முதலீடுசெய்ய உள்ளன. இதன்மூலம் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற்பூங்காவில் இத்திட்டம் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம் நான்குசக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- இதற்காக, தமிழக அரசுக்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கும் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் பரப்பில் மினி டைடல் பூங்கா அமைக்க ரூ.30 கோடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் 60,000 சதுரஅடி பரப்பில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்காவுக்கான கட்டிடத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
- ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், அரசு, தனியார் மருத்துவமனைகளில் 4.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100-க்கும் மேற்பட்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் தொட்டிகளை அமைத்துள்ளது.
- தற்போது ரூ.150 கோடியில் 105 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட்ஓசூர் தொழிற்பூங்காவில் புதிய அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இந்த ஆலையை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் இந்நிறுவனம் பெற, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒற்றைச்சாளர இணையம் மூலம் ஆதரவு சேவைகள் அளித்துள்ளது.
- 'ஃபைபர் டு தி ஹோம்' துறையில் ஐரோப்பிய சந்தைகளில் முன்னணி வகிக்கும் ஜிஎக்ஸ் (GX) குழுமம், கடந்த 2022 ஜூலையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.110 கோடி முதலீடு மற்றும் 100 உயர்தர தொழில்நுட்ப பொறியியல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் அமைக்க,தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, குறுகியகாலத்திலேயே, சென்னை துரைப்பாக்கத்தில் ரூ.110 கோடியில் நிறுவப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 62வது அமர்வின் முதல் கூட்டம் நியூயார்க்கில் இந்த வாரம் நடந்தது. இந்த கூட்டத்தில் 62வது அமர்வின் தலைவராக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தேர்வு செய்யப்பட்டார்.
- துணை தலைவர்களாக வடக்கு மாசிடோனியாவை சேர்ந்த ஜான் இவாநாவ்ஸ்கி மற்றும் டொமினிக் குடியரசை சேர்ந்த கார்லா மரியா கார்ல்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- 49வது ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் கூடியது.
- கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
- சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பிற நடவடிக்கைகள் ஜிஎஸ்டி இழப்பீடு, ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், திறன் அடிப்படையிலான வரிவிதிப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) அறிக்கையின் ஒப்புதல் தொடர்பான பின்வரும் பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் வழங்கியுள்ளது.
- 2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 16,982 கோடியாகும். ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் எந்தத் தொகையும் இல்லாததால், இந்தத் தொகையை அதன் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்கால இழப்பீடு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும்.
- கூடுதலாக, மாநிலங்களின் தலைமை கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட வருவாய் புள்ளிவிவரங்களை வழங்கிய மாநிலங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி ஜிஎஸ்டி இழப்பீடான ரூ 16,524 கோடியையும் மத்திய அரசு வழங்கும்.
- இந்த வகையில், தமிழ்நாட்டுக்கு ஜூன் மாத இழப்பீடாக ரூ. 1201 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்படும். ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தொடர்பான விஷயத்தில், சில மாற்றங்களுடன் அமைச்சர்கள் குழுவின் அறிக்கையை கவுன்சில் ஏற்றுக்கொண்டது. ஜிஎஸ்டி சட்டங்களுக்கான இறுதி வரைவு திருத்தங்கள் உறுப்பினர்களின் கருத்துகளுக்காக அவர்களுக்கு அனுப்பப்படும். அதை இறுதி செய்ய தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலை போன்ற பொருட்களிலிருந்து கசிவுகளை அடைத்து, வருவாய் சேகரிப்பை மேம்படுத்தும் நோக்கில், குழுவின் பரிந்துரைகளுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. பென்சில் ஷார்ப்னருக்கான வரியை 18%லிருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல்.
- நாட்டில் டிசம்பர் 2022-ல் சுரங்க மற்றும் குவாரித் துறை உற்பத்தி, 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 9.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 2022-23ம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான, காலகட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 5.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.
- 2021 டிசம்பரை விட 2022 டிசம்பரில் உற்பத்தி அதிகரித்த முக்கியமான தாதுக்கள் மற்றும் அதிகரித்த சதவீதம்: தங்கம் (64.2%), பாஸ்போரைட் (53.9%), இரும்புத் தாது (19.5%), சுண்ணாம்பு (14.5), மாங்கனீஸ் தாது (12.8%), நிலக்கரி (11.4%) ), செறிவூட்டப்பட்ட துத்தநாகம் (9.4%), செறிவூட்டப்பட்ட லீட் (4.5%), செறிவூட்டப்பட்ட காப்பர் (3.9%), மற்றும் இயற்கை எரிவாயு (2.6%).