Type Here to Get Search Results !

14th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


14th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா 250 ஏர்பஸ் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்
  • பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டுவந்த 'ஏர் இந்தியா' நிறுவனத்தை, கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. 
  • இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்திவரும் டாடா குழுமம், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • காணொலி வாயிலாக நடைபெற்றஇந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் கலந்துகொண்டனர்
2035-ல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - ஐரோப்பிய பார்லிமென்ட் ஒப்புதல்
  • ஐரோப்பியன் யூனியனில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளுக்கு பொதுவான ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் மசோதா கொண்டுவரப்பட்டது. 
  • அதில் பருவ நிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர் கொள்ளவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் 2035ம் ஆண்டில் இனி புதிய பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் விற்பனக்கு தடை விதிப்பது எனவும், மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது எனவும் மசோதா கொண்டுவரப்பட்டது. 
  • இதன் மீது உறுப்பு நாடுகளின் எம்.பி.க்கள் ஒட்டளித்தனர். இம்மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மார்ச் மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் ஜனவரியில் 4.73% ஆக ஆக சரிவு
  • கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 5.85% ஆக இருந்தது. இதையடுத்து கடந்த டிசம்பரில் 4.95 ஆக குறைந்தது. இந்நிலையில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 4.73% ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் மொத்த பணவீக்கம் தொடர் சரிவிற்கு வழிவகுத்துள்ளது. 
  • கடந்த 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு மொத்த பணவீக்கம் குறைந்துள்ளது. இந்த பணவீக்க விகிதம் குறைவதற்கு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைத் தவிர, கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியும் காரணமாக எனக் கூறப்படுகிறது.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா, ஹரியானா காவல் துறையினருக்கு பிரெசிடென்ட்ஸ் கலர் (மிக உயரிய குடியரசுத் தலைவர் சிறப்புக்கொடியை) கர்னாலில் வழங்கினார்
  • மத்திய உள்துறை அமைச்சரும், ஒத்துழைப்பு அமைச்சருமான திரு அமித் ஷா, ஹரியானா மாநிலம், கர்னாலில் இன்று ஹரியானா காவல்துறையினருக்கு 'பிரெசிடென்ட்ஸ் கலர் (மிக உயரிய குடியரசுத் தலைவர் சிறப்புக்கொடியை)' வழங்கினார். 
  • இந்த நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் ஸ்ரீ மனோகர் லால், ஹரியானா சட்டப்பேரவைத் தலைவர் கியான் சந்த் குப்தா, மாநில உள்துறை அமைச்சர் திரு அனில் விஜ் மற்றும் ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் திரு பி.கே. அகர்வால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel