2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் - ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி
- உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் 2026-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்நிலையில், இத்திட்டத்தின் விரிவாக்கத்துக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 900 கோடி கடனுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் வங்கி அதிகாரிகளும் அண்மையில் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தம் வாயிலாக, மிகப்பெரிய தொகையை தற்போது கடனாக கிைடக்கவுள்ளது. சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆசிய மேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளித்து சுமார் 780 மில்லியன் டாலர் மதிப்பிலான பல அடுக்கு நிதியுதவி திட்டத்துக்கு (எம்.எப்.எப்.) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, முதல் தவணையாக ரூ.2,900 கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.
- இந்தக் கடன், சென்னை மெட்ரோரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில் குறிப்பிட்ட திட்டப் பணிகளுக்கு உதவியாக இருக்கும். மாதவரம்-சிறுசேரி சிப்காட் 3-வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் வரை 10.1 கி.மீ. தொலைவுக்கு திட்டப்பணிகள் நடைபெறும்.இதில், 9 நிலையங்கள் இடம்பெறும்.
- 4-வது வழித்தடத்தில், கலங்கரைவிளக்கம்-மீனாட்சி கல்லூரிஇடையே 10 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. 5-வது வழித்தடத்தில் சிஎம்பிடி - ஒக்கியம் துரைப்பாக்கம் இடையே வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
- 15-வது நிதி ஆணையத்தின் எஞ்சிய காலத்தில் (2022-23 இருந்து 2025-26 வரையில்) வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, ரூ. 12882.2 கோடியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- செலவினங்களுக்கான நிதிக் குழு தனது பரிந்துரையில் வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்திற்கென ரூ.8139.5 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
- 2022-23 முதல் 2025-26 வரையிலான 15 ஆவது நிதி ஆணையத்தின் எஞ்சிய நான்கு ஆண்டுகளுக்கு 'பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி' என்ற புதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 100 சதவீதம் மத்திய அரசின் நிதியிலான இந்த புதிய திட்டத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கும்.
- இந்த நான்காண்டு காலத்திற்கான திட்ட ஒதுக்கீடு ரூ.6600 கோடியாக இருக்கும். 2025-26-க்குள் திட்டங்களை நிறைவு செய்ய முயற்சி மேற்கொண்டிருப்பதால், இதற்குப் பிறகு முடிக்க வேண்டிய பணிகள் இருக்காது.
- இதற்கான நிதி ஒதுக்கீடு 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் அனுமதிக்கப்படும். செலவினம் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகள் வரை தொடரும். இந்த ஆண்டுக்குள் பணிகளை முடிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
- அடிப்படை கட்டமைப்பு, துணை தொழில்கள், சமூக வளர்ச்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு 'பிரதமரின் வடகிழக்குப் பிராந்தியத்திற்கான வளர்ச்சி முன்முயற்சி' என்ற புதிய திட்டம் வழிவகுக்கும். அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனால் பலனடையும்.
- தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
- தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.
- இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தண்ணீர் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள அளப்பரிய பங்களிப்பு குறித்து பேசி, நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
- நமது அரசியலமைப்பில், தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது, நாட்டின் கூட்டு இலக்குகளை அடைய மாநில அரசுகளின் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகள் பெரிதும் உதவும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
- “அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழாவின் பயணத்தின் முக்கியமான பரிமாணமாக தண்ணீர் தொலைநோக்கு @ 2047 உள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
- தண்ணீர் குறித்து முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்கள் ஆண்டு மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் நீர்வள அமைச்சர்களும் பங்கேற்றனர்.
- பயணிகளுக்கு உயர்தரமான ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்குவதன் மூலம் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் 5 நட்சத்திர அந்தஸ்துடன் ‘சரியான நிலையத்தில் உண்ணவும்’ என்ற விருது வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பான சுத்தமான உணவை பயணிகளுக்கு அளிப்பதை உறுதி செய்யும் ரயில் நிலையத்திற்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கப்படுகிறது.
- நட்சத்திர சான்றிதழ் பெற்றுள்ள மற்ற ரயில் நிலையங்கள் - ஆனந்த் விஹார் ரயில் நிலையம் (தில்லி); சத்ரபதி சிவாஜி முனையம் (மும்பை), மும்பை மத்திய ரயில் நிலையம் (மும்பை), வதோதரா ரயில் நிலையம், சண்டிகர் ரயில் நிலையம் மற்றும் போபால் ரயில் நிலையம்.