Type Here to Get Search Results !

TNPSC 4th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு ஒப்புதல்

  • மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப கட்டமாக ரூ.19,744 கோடி மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்படும். 
  • இதில் பசுமை ஹைட்ரஜன் மாற்றம் செயல்பாடுகளுக்கு ரூ.17.490 கோடியும், முன்னணி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும், இதர திட்ட செயல்பாடுகளுக்கு ரூ.388 கோடியும் ஒதுக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்துவதற் கான வழிகாட்டுதல்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உருவாக்கும்.
  • இத்திட்டம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஆண்டுக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன்களாக மேம்படுத்தும். இதோடு நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனும் 2030-ம் ஆண்டுக்குள் 125 ஜிகா வாட்டாக அதிகரிக்கும். இது ரூ.8 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழிவகுப்பதோடு, 2030-ம் ஆண்டுக்குள் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளையும் உருவாக்கும்.
  • நாட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மூலம், ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான படிம எரிபொருட்களின் இறக்குமதியை குறைக்கும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களையும் ஆண்டுக்கு 50 மில்லியன் டன்கள் அளவுக்கு குறைக்கும்.
ரூ.15,610 கோடியில் 8 புதிய தொழில் முதலீடுகள் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்
  • தமிழக சட்டப்பேரவையின் 2023-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். 
  • இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள், திட்டங்கள், தொழில் முதலீடுகள், புதிய தொழில் கொள்கை குறித்தெல்லாம் விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பின்னர், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் துறையில் புதிதாக ரூ.15,610.43 கோடி மதிப்பிலான, 8 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 8,776 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • குறிப்பாக, மின்சார வாகனங்கள், மின்கலன் உற்பத்தி, ஆட்டோமொபைல், வயர்லெஸ் தொழில்நுட்பம், ஜவுளி, ஆக்சிஜன் உற்பத்தி தொழில் பிரிவுகளில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டிய பகுதிகளில் புதிய தொழில்கள் அமையும்.
  • தற்போது தமிழகத்தில் மின்னணு வாகனக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு, சாலை வரி உள்ளிட்ட சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மின் வாகனங்கள் உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பான தொழில் கொள்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக மீண்டும் எரிக் கார்செட்டி நியமனம்
  • எரிக் கார்செட்டியை இந்தியாவுக்கான தனது தூதராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மீண்டும் நியமித்துள்ளார். எரிக் கார்செட்டி, 51, ஜனாதிபதி பிடனுக்கு நெருக்கமானவர். அவர் 2013 முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இருந்து வருகிறார்.
மறைந்த திரு மனோகர் பாரிக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு அவருடையப் பெயரை வைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கோவா மாநிலத்தின் 4 முறை முதல்வராகவும், மத்தியப் பாதுகாப்பு அமைச்சராகவும், பதவி வகித்த மறைந்த திரு மனோகர் பாரிக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடையப் பெயரை கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
  • கோவா மாநில பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற மறைந்த திரு மனோகர் பாரிக்கரை நினைவு கூறும் வகையில், கோவா பசுமை சர்வதேச விமான நிலையத்திற்கு ‘மனோகர் சர்வதேச விமான நிலையம் – மோபா, கோவா’.   
  • கடந்த 2022 –ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவா பசுமை விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தது நினைவிருக்கலாம்.
பொது சேவை ஒலிபரப்புக்கு பெரும் ஊக்கம்: பிரசார் பாரதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2539.61 கோடி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 2025-26 ஆம் ஆண்டு வரை, ரூ.2539.61 கோடி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • பிரசார் பாரதியின் உள்ளீட்டு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இது உதவுவதுடன், சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் ஆதரவு வழங்கும். ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.
  • நாட்டில் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தகவல், கல்வி, பொழுதுபோக்கு, மக்களுக்கான நிகழ்ச்சிகளை, தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மூலம் நாட்டின் தொலை தூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பரப்பும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகிறது. பொது சுகாதார செய்திகளையும், கொவிட் பெருந்தொற்று காலத்தில் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் பிரசார் பாரதி மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
  • இந்தத் திட்டம் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் பிரசார் பாரதியின் ஒலிபரப்பை விரிவுபடுத்த வழிவகுக்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு உயர்தரமான உள்ளீடு கொண்ட செய்திகளை வழங்கி வருவதுடன் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளை உள்ளடக்கிய டிடிஎச் தளத்தையும் பிரசார் பாரதி கொண்டுள்ளது.
  • தூர்தர்ஷன் தற்போது 36 டிவி சேனல்களை இயக்கி வருகிறது. இவற்றில் 28 பிராந்திய சேனல்களாகும். அகில இந்திய வானொலி 500-க்கும் மேற்பட்ட மையங்களில் இயங்கி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் 382 மெகாவாட் திறன் கொண்ட சன்னி அணை நீர் சக்தி திட்டத்திற்கு முதலீடு தொடர்பான ஒப்புதல்
  • இமாச்சலப் பிரதேசத்தில் எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் 382 மெகாவாட் திறன் கொண்ட சன்னி அணை நீர் சக்தி திட்டத்திற்கு முதலீடு தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  முடிவு எடுக்கப்பட்டது.
  • இந்த திட்டத்தின் முதலீட்டுத் தொகையாக ரூ. 2614.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதில் உள்கட்டமைப்பு சேவைகளுக்கு மத்திய அரசின் நிதி ஆதாரமாக ரூ. 13.80 கோடி வழங்கப்படும்.
  • கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி வரையில், இந்தத் திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவினங்களாக ரூ. 246 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கங்களை கருத்தில் கொண்டு தற்போது அமையவிருக்கும் 382 மெகாவாட் திறன் கொண்ட சன்னி அணை நீர் சக்தித் திட்டத்தின் மூலம் உள்ளூர் தொழில்துறையினர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு பயனுள்ள வகையில் அமையும்.
தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக இந்துஸ்தான் காப்பர் லிமிடெட், ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தொழில்நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக இந்துஸ்தான் காப்பர்  லிமிடெட் (ஹெச்சிஎல்) மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்-இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ்) தன்பத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கொல்கத்தாவில் உள்ள  ஹெச்சிஎல் தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. 
  • ஹெச்சிஎல்-ன் தலைமை நிர்வாக இயக்குநர் திரு அருண்குமார் சுக்லா மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்), தன்பத் பேராசிரியர் ராஜீவ் சேகர் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • தற்போது கையெழுத்தாகியுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை ஐஐடி (ஐஎஸ்எம்) வழங்க வழிவகை செய்யப்படும். 
  • மேலும் உலோக உற்பத்தியில் புதிய தொழிலநுட்பங்கள் மூலம் உற்பத்தி அளவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் போன்றவைகள் மேற்கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel