Type Here to Get Search Results !

TNPSC 3rd JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 

ரஞ்சி கோப்பையில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உனத்கட் சாதனை

  • ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய சவுராஷ்டிரா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனத்கட் 3,4,5-வது பந்துகளில் முறையே துருவ் ஷோரே (0), வைபவ் ராவல் (0), யாஷ் துல் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். 
  • இதன் மூலம் 88 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஜெயதேவ் உனத்கட்.
  • இதற்கு முன்னர் 2017-18ம் ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் மும்பைக்கு எதிராக கர்நாடகாவின் வினய்குமார் இரு ஓவர்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அவர் முதல் ஓவரின் கடைசி பந்திலும் அதன் பின்னர் 3-வது ஓவரின் முதல் இரு பந்துகளிலும் விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.
வெளி உணவை தடை செய்ய திரையரங்குகளுக்கு முழு உரிமை - உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள், வெளி உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், அங்கு விற்கப்படும் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 
  • திரையரங்குகளில் விற்கப்படும் பண்டங்களின் விலை இரண்டு மடங்காக இருக்கிறது. தண்ணீர் எடுத்துச் செல்வதற்குக்கூட பல இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது நீண்டகால பிரச்னையாக உள்ளது. 
  • இந்நிலையில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம், திரையரங்குகளுக்குள் உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. 
  • இதை எதிர்த்து திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 
  • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ''திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கத்திற்கு உள்ளே உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவது தொடர்பான விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க முழு உரிமை உள்ளது. 
  • அதே நேரம் திரைப்படம் பார்க்க வருபவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கவும் அவர்களுக்கு தனிப்பட்ட உரிமை உள்ளது. குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது. 
  • வெளி உணவு பொருட்களை திரையரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வர்த்தக ரீதியான முடிவு. அதில் தலையிட முடியாது. எனவே திரைப்படம் பார்ப்பவர்கள் திரையரங்க விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
  • அதே நேரத்தில் தரமான மற்றும் சுகாதாரமான குடிநீர் என்பது இலவசமாக திரையரங்குகளில் வைக்கப்பட வேண்டும். 
  • குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது'' என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு ஊர்தி தேர்வு
  • ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இவை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பெருமையை, பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும்.
  • முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பில் எந்தெந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற ணேடும் என்று ஒன்றிய அரசு தேர்வு செய்யும். 
  • டெல்லியில் வருகிற 26ம் தேதி நடைபெறும் அணிவகுப்பில் எந்தெந்த அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும் என தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. அதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழகம் சார்பில், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. முன்னதாக இந்த அணிவகுப்பில் பங்கேற்க 7 கட்டமாக தேர்வுகள் நடைபெற்றது. 
  • இதில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார ஊர்தியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், குஜராத், அரியானா, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், லடாக் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது இந்தியா

  • தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் (அப்பு) தலைமைப் பொறுப்பை இந்தியா இம்மாதத்தில் ஏற்றுக்கொள்கிறது.  
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடைபெற்ற 13-வது அப்பு மாநாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அஞ்சலக சேவைகள் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் டாக்டர் வினயா பிரகாஷ் சிங் ஒன்றியத்தின் தலைமை செயலாளராக 4 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார்.
  • ஆசியான்-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 32 நாடுகள் பங்கேற்றுள்ள அமைப்பாக திகழும் அப்பு, இந்தப் பிராந்தியத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையே அஞ்சலகம்  தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதும் அஞ்சல் சேவைகளில் ஒத்துழைப்பை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
16.39% வளர்ச்சியோடு நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி, 2022 ஏப்ரல்-டிசம்பரில் 607.97 மில்லியன் டன்னாக அதிகரிப்பு
  • நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 607.97 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது 2022-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தின் 522.34 மில்லியன் டன்னைவிட 16.39% அதிகம். 
  • இந்திய நிலக்கரி நிறுவனம், நிதி ஆண்டு 22 இல் உற்பத்தி செய்த 413.63 மில்லியன் டன் நிலக்கரியை விட, நிதியாண்டு 23 இல் 15.82% கூடுதலாக, 479.05 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது.
  • சொந்த நிலக்கரி தொகுப்புகளின் நிலக்கரி செயல்திறனை அதிகளவில் பயன்படுத்தி, கூடுதல் நிலக்கரியை சந்தையில் விற்பனை செய்வதற்கு நிலக்கரி அமைச்சகம் வழிவகை செய்துள்ளதன் காரணத்தால் சொந்த நிலக்கரி சுரங்கம் மற்றும் இதர நிறுவனங்களில் நிதி ஆண்டு 22 இல் உற்பத்தி செய்யப்பட்ட 62.19 மில்லியன் டன்னை விட 31.38% கூடுதலாக, 2022 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் 81.70 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.
  • ஒரு நிதியாண்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலக்கரி/ பழுப்பு நிலக்கரியில் 50% வரை சொந்த சுரங்கத்தின் குத்தகைதாரர் விற்பனை செய்ய அனுமதிக்கும் நோக்கத்தில் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2021-இன் கீழ் கனிம சலுகை விதிகள் 1960-ஐ நிலக்கரி அமைச்சகம் திருத்தியுள்ளது.
  • பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து முக்கிய சுரங்கங்களையும் ரயில் மூலம் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது. 
  • இதன் விளைவாக நாடு முழுவதும் பல்வேறு துறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொத்த நிலக்கரியின் அளவு 2022 ஏப்ரல்- டிசம்பரில் 637.51 மில்லியன் டன்னாக பதிவானது. இது நிதியாண்டு 22 இன் இதே காலகட்டத்தில் பதிவான 594.22 மில்லியன் டன்னைவிட 7.28% கூடுதலாகும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel