Type Here to Get Search Results !

TNPSC 29th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்
  • ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் - ரூர்கேலாவில் கடந்த 13-ம் தேதி தொடங்கி, நேற்று (ஜன. 29) வரை ஆடவருக்கான 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது.
  • இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதையடுத்து, நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி மற்றும் ஜெர்மனி அணி நேருக்கு நேர் மோதின. 
  • ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம வகிக்க பெனாலிடி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி சூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கண்க்கில் வீழ்த்தி ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. 
  • சர்வதேச அளவில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பெல்ஜியம் 15 முறையும், ஜெர்மனி 14 முறையும் வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 10வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (24 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் (35 வயது, 4வது ரேங்க்) 6-3, 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று 10வது முறையாக ஆஸி. ஓபன் கோப்பையை முத்தமிட்டார். 
  • இப்போட்டி 2 மணி, 56 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலமாக, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை சமன் செய்து (22 பட்டங்கள்) முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். 
  • மேலும், ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை ஜோகோவிச் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல் பரிசாக ரூ.16.5 கோடி வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த சிட்சிபாஸ் ரூ.9.25 கோடி பெற்றார்.
அண்டர்-19 மகளிர் T20 WC | இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
  • அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் எடிஷன் இது. இந்தத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி இந்தத் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. ரவுண்ட் ராபின் மற்றும் நாக்-அவுட் என இந்த தொடர் நடைபெற்றது.
  • இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
  • 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு எட்டியிருந்தது இந்தியா. 
  • இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  4 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாது, பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
போர் அச்சுறுத்தல்களை மீறி யுனெஸ்கோ அந்தஸ்தைப் பெற்றுள்ள உக்ரேனிய துறைமுகம்
  • இயற்கை தளங்கள், பாரம்பரிய கட்டிடங்களை அதன் வரலாற்று தனித்தன்மையுடன் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் சில இடங்களை பாரம்பரிய தலமாக அறிவிக்கும்.
  • அதை எந்த சேதமும் ஆகாமல் பாதுகாப்பது மனித சமூகத்தின் கடமை என்று விதித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. 
  • இந்நிலையில் போர்களை தாண்டி ஐக்கிய நாடுகளின் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள ஒடெசா துறைமுக நகரத்தை உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
  • யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 21 உறுப்பு நாடுகளில் 6 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இரு நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் விலகிவிட்டது. 
  • ரஷ்யா இந்த தலத்தின் 'சிறந்த உலகளாவிய மதிப்பை' அங்கீகரிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தவும் வாக்குபதிவை தவிர்க்கவும் பலமுறை முயற்சித்தது. ஆனால் இறுதியில் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்த இடத்தை பாதுகாக்க உக்ரைன் வலுவூட்டப்பட்ட தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை சர்வதேச அளவில் பெற முடியும் என்று யுனெஸ்கோவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்த சிறப்பு செயலி அறிமுகம்
  • கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிக்காக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கைபேசி செயலியை (மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இதில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் விளையாட்டுப் போட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்தச் செயலி மூலம் எளிதில் பெற முடியும்.
  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளுக்காக பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்தச் செயலி வீரர்களுக்கான ஒரு பிரத்யேக உள்நுழைவு அம்சத்தைக் கொண்டுள்ளது. 
  • வீரர்கள் பதிவுசெய்த நேரத்திலிருந்து, முழுமையாக அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.  போட்டி தொடங்கும் முன், வீரர்களின் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்தச் செயலி வாய்ப்பளிக்கிறது. இது விளையாட்டு வீரர்களுக்கு பதிவு செய்யும் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.
  • வீரர் அல்லது வீராங்கனை விளையாட்டுகளுக்குப் பதிவு செய்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடங்களுக்கு வரும்போது, தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலை, வீரர்கள் தங்க வேண்டிய தங்குமிடம், விளையாட்டு வீரர்களுக்கான போக்குவரத்துத் திட்டம் ஆகியவற்றை இச்செயலியில் சரிபார்க்கலாம். 
  • அத்துடன் விளையாட்டு வீரர்கள் அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான தொடர்பு எண்களும் இதில் உள்ளன. மேலும், விளையாட்டுகளின் போது விளையாட்டு வீரர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உடனடி பதில்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக, வாட்ஸ் அப் சாட்போட் (Whatsapp Chatbot) உருவாக்கப்பட்டுள்ளது.
  • விளையாட்டு ரசிகர்களுக்கு, இந்தச் செயலி, போட்டி அட்டவணைகள், பதக்க எண்ணிக்கை, விளையாட்டு அரங்குகளின் முகவரி மற்றும் புகைப்படத் தொகுப்புகள் போன்ற தகவல்களை வழங்குகிறது.
  • இந்தச் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முடியும். இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel