Type Here to Get Search Results !

இந்திய குடியரசு தினம் 2024 / REPUBLIC DAY OF INDIA 2024

  • இந்திய குடியரசு தினம் 2024 / REPUBLIC DAY OF INDIA 2024: இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. 
  • முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. 
  • இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு தினம் எப்படி கொண்டாடப்படும்?

  • இந்திய குடியரசு தினம் 2024 / REPUBLIC DAY OF INDIA 2024: குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். 
  • முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும். 
  • மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது. 
  • டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள். 
  • இந்த முறை எகிப்து நாட்டின் அதிபர் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

75வது குடியரசு தின கொண்டாட்டங்கள்

  • இந்திய குடியரசு தினம் 2024 / REPUBLIC DAY OF INDIA 2024: இந்தாண்டு குடியரசு தின விழாவில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 75வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக 'கடமை பாதை'யில் (கர்தவ்ய) தேசியக் கொடியை ஏற்றுகிறார். இந்த கடமை பாதையானது, கடந்த காலங்களில் 'ராஜ்பாத்' என்று அழைக்கப்பட்டது.
  • ஆனால் ஒன்றிய அரசு அதன் பெயரை கடமை பாதை என்று மாற்றியது. இந்நிலையில் குடியரசு தினம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகி உள்ளன. 
  • கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் கூட, புதியதாக வகுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி தான் நடைமுறைக்கு வந்தது.
  • அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் நாட்டின் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். அதன்பின், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடக்கும். 
  • நாட்டின் முதல் குடியரசு தின விழா, ெடல்லியின் இர்வின் ஸ்டேடியத்தில் நடந்தது. தற்போது இந்த இடத்தை தேசிய அரங்கம் என்று அழைக்கின்றனர். கடந்த 1954ம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்கள் பல இடங்களில் கொண்டாடப்பட்டது.
  • இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே (ராஜ்பாத்), செங்கோட்டை, ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களிலும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 
  • இருப்பினும், 1955ம் ஆண்டு முதல் ராஜ்பாத்தில் (கடமை பாதை) தான் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அணிவகுப்பு மரியாதையானது, ரைசினா ஹில்ஸில் தொடங்கி ராஜ்பாத், இந்தியா கேட் வழியாக செங்கோட்டையை அடைகிறது.
  • முதல் குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 15 ஆயிரம் பேர் மைதானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அணிவகுப்பில் முப்படையினரும் கலந்து கொண்டனர். இதுதவிர, ராணுவத்தின் 7 குழுக்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றன. 
  • இந்த மரபு இன்றும் தொடர்கிறது. அதேபோல் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட காலத்தில் இருந்தே, வெளிநாட்டு சிறப்பு விருந்தினரை அழைக்கும் வழக்கமும் இன்று வரை தொடர்கிறது. முதல் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • அந்நாட்டின் இசைக் குழுவும், இந்திய இசைக்குழுவுடன் இணைந்து விழாவை சிறப்பிக்க உள்ளது. அதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

குடியரசு தலைவரின் அதிகாரங்கள்

  • இந்திய குடியரசு தினம் 2024 / REPUBLIC DAY OF INDIA 2024: குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். 
  • அன்றைய தினம் குடியரசு தலைவருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பது குறித்தும், குடியரசு தலைவரின் அதிகாரங்கள் குறித்தும் பலர் அறிந்திருக்க மாட்டோம். அவரின் அதிகாரங்கள் குறித்த பார்வைதான் இந்த கட்டுரை.
  • இந்திய சுதந்திரம் பெற்றபின்னர் கூட இந்தியா பிரிட்டிஷ் வழங்கிய டொமினியன் அந்தஸ்தில்தான் செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பிரநிதியாக கவர்னர் ஜெனரல் என்பவர் தான் இந்தியா அரசின் தலைமை அரசியல் தலைவராக வளம்வந்தார். 
  • அதன்பின்னர் இந்தியா 1950-ம் ஆண்டு குடியரசான பின்னர்தான் பிரிட்டிஷ் ஆதிக்கம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைமை அரசியல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்தியாவின் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராக இருப்பதால், அவருக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரே இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்குகிறார். 
  • இந்தியாவின் முப்படைகளின் தலைவராக குடியரசு தலைவர் திகழ்கிறார். மேலும், ஒரு நாட்டின் மீது போரை அறிவிக்கவும், அந்த போரை முடித்து வைக்கவும் குடியரசு தலைவருக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • மக்களவையில் பெரும்பான்மையை இழந்த அரசை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உரியது. மக்களவையில் எந்த கட்சியும், கூட்டணியும் பெரும்பான்மை பெறாத நிலையிலும் தனது விருப்பத்தின் படி யாரையும் ஆட்சியமைக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடக் கூடிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. நாடாளுமன்ற அவை கூடும்போதும், கூடாத போதும் அவசர சட்டத்தை நிறைவேற்றும் உரிமையும் அவருக்கு உள்ளது.
  • இது தவிர நாட்டின் முக்கிய பொறுப்புகளான ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உள்ளது. 
  • இந்திய நாடாளுமன்றத்தின் அங்கமாகவும் குடியரசுத் தலைவர் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு இருக்கிறது.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாக அமலுக்கு வரும். 
  • நாடாளுமன்றத்தின் அவைகளை எந்த நேரத்திலும் கலைக்கும் உரிமையும் குடியரசு தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிராகரித்து திரும்ப அனுப்பும் உரிமையும் குடியரசு தலைவருக்கு உண்டு.
  • இதுதவிர நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் ஒருசேரக் கூட்டுவதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும், நாட்டின் எந்த பகுதியிலும் தேவைக்கு ஏற்ப அவசரநிலையை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • அவசரகாலத்தின் போது சட்டப்பிரிவு 20 மற்றும் 21-ஐ தவிர மற்ற அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காக நீதிமன்றங்களுக்குச் செல்லும் உரிமையை குடியரசுதலைவரால் தடுத்து நிறுத்தவும் முடியும். அவசரகாலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்.
  • இந்திய அரசின் யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு தனது நேரடி பிரநிதிகள் மூலம் நிர்வாகத்தை குடியரசுத் தலைவரால் கட்டுப்படுத்தவும் அதிகம் உண்டு. 
  • நிதி நெருக்கடியை அறிவிக்கவும், அத்தகைய காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவும் முழு அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு. 
  • நாடாளுமன்றத்தில் நிதி மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரிலே அமல்படுத்தமுடியும். நீதித்துறையின் தலைவராக இருப்பதால் குற்றங்களை நிறுத்திவைக்கவோ, குற்றவாளியை விடுவிக்கவோ,மன்னிக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • இது போன்ற பல்வேறு அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டு செயல்படுமாறு அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • நாடாளுமன்றத்தால் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இதன் காரணமாக உண்மையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. 
  • தனது அதிகாரங்களில் பலவற்றை அரிதாகவே குடியரசுத் தலைவர் பயன்படுத்துவதால் அவரின் முழு அதிகாரம் குறித்த பொதுமக்களுக்கு குறைவாகவே தெரியவருகிறது.

ENGLISH

  • REPUBLIC DAY OF INDIA 2024: Republic Day is celebrated on the day the Constitution Act came into force for India. India gained independence from the British on 15 August 1947. Earlier, a committee was formed to draft a constitution for India and work was underway. 
  • The Constitution of India was drafted in 2 years, 11 months and 18 days and came into force on 26 January 1950. This day is celebrated as Republic Day of India every year.

How will Republic Day be celebrated?

  • REPUBLIC DAY OF INDIA 2024: On the occasion of the Republic Day celebration, a military parade will be held at Rajpath, Delhi to show the strength of India's armed forces to the world. Before this, the President will hoist the flag at Delhi's Rajpath. 
  • Along with the tri-army parade, there will also be a parade of vehicles that reflect the culture of India. It will feature cultural vehicles from various states. The parade will be about 8 kilometers long. States will be hoisted by their respective state governors. 
  • Cultural programs will be held on behalf of state governments. Also, awards are given on this day to honor those who have worked well. Every year a special guest is invited at the Republic Day celebrations in Delhi. 
  • They are often the Prime Ministers or Presidents of the countries of the world. This time the President of Egypt Al Sisi will participate as a special guest.

75th Republic Day Celebrations

  • REPUBLIC DAY OF INDIA 2024: Various innovations have been introduced in this year's Republic Day celebrations. India's 75th Republic Day will be celebrated on the 26th (the day after tomorrow) across the country. 
  • President Draupadi Murmu hoists the National Flag on the 'Path of Duty' (Kadavya) for the first time since his inauguration. This duty route was called 'Rajpath' in the past.
  • But the Union Government changed its name to Duty Path. In this case, interesting things about the Republic Day have come out. Even though India gained independence on August 15, 1947, the newly drafted Constitution came into force only on January 26, 1950.
  • That's why we celebrate 26th January every year as Republic Day. On that day, the President of the country will hoist the national flag and give an address. After that, there will be a military parade.
  • The country's first Republic Day celebration took place at the Irvine Stadium in Italy. Now this place is called National Stadium. Republic Day celebrations were celebrated in many places till 1954.
  • Republic Day celebrations were also held at Irvine Stadium, Kingsway (Rajpath), Red Fort and Ramlila Maidan. However, since 1955, Republic Day celebrations have been held on the Rajpath (path of duty).
  • The parade starts from Raisina Hills and reaches the Red Fort via Rajpath, India Gate. Around 15,000 people were said to be at the stadium to witness the first Republic Day parade. The three armed forces also participated in this parade. 
  • Apart from this, 7 groups of the army participated in the Republic Day celebrations. This tradition continues today. Similarly, since the first Republic Day was celebrated, the custom of inviting foreign special guests continues till today. 
  • A music group from that country will grace the occasion along with an Indian band. Therefore, tight security has been put in place throughout Delhi.

President Powers

  • REPUBLIC DAY OF INDIA 2024: On Republic Day, the President will receive the Honorable Mention of the Indian Armed Forces. Later, he will also award medals to the soldiers who have served well. Many people do not know why the President is given so much importance on that day and the powers of the President. This article is a look at his powers.
  • Even after India's independence, India functioned under British-granted Dominion status. As the representative of British rule, the Governor General became the chief political head of the Indian government. 
  • After that, after India became a republic in 1950, the British rule was completely abolished and the President elected under the Constitution of India was elected as the chief political head of the Government of India.
  • As the President of India is the head of the country, he is vested with various powers. He is the first citizen of India. The President is the head of the three armed forces of India. Also, the President is empowered to declare war on a country and to end that war.
  • The President has the power to dismiss a government that has lost its majority in the Lok Sabha. The President has the power to appoint anyone as per his wish to form the government and to prove the majority even when no party or coalition has a majority in the Lok Sabha. He also has the right to pass emergency laws when the House of Parliament is in session and when it is not.
  • Apart from this, the President has the power to appoint important responsibilities of the country such as governors, judges of the Supreme Court and High Courts. The President is also a member of the Parliament of India. The President has the power to appoint nominees to both Houses of Parliament.
  • Any bill passed by Parliament becomes law only after the assent of the President. The President is also empowered to dissolve the Houses of Parliament at any time. The President also has the right to reject and send back a bill passed by the Parliament.
  • He also has the power to convene both the Houses of Parliament together. Also, the President is empowered to declare emergency in any part of the country as per need. The President can also suspend the right to go to courts to enforce fundamental rights other than Articles 20 and 21 during emergency. In case of emergency, the entire power of the country is vested in the President.
  • The President is empowered to administer the Union Territories of the Government of India. There is more control over the administration by the President through his direct representatives. 
  • The President has full power to declare financial crisis and reduce the salaries of government employees during such times. Finance Bills can be enacted in the Parliament on the recommendation of the President. Being the head of the Judiciary, the President is empowered to suspend crimes, acquit and pardon criminals.
  • While such various powers have been given to the President, the Constitution has been designed so that the President is bound by the decisions of the government elected by the people. Parliament can impeach the President. 
  • Due to this, the real power is vested in the Parliament. Because the president seldom exercises many of his powers, the public is less aware of his full powers.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel