BHARATHIYAR QUOTES IN TAMIL | தமிழில் பாரதியார் மேற்கோள்கள்
TNPSCSHOUTERSJanuary 26, 2023
0
BHARATHIYAR QUOTES IN TAMIL | தமிழில் பாரதியார் மேற்கோள்கள்:சுப்ரமணிய பாரதியார் (Subramania Bharathiyar) ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் மேற்கோள்களை விரிவாகக் காண்போம்.
சிறந்த தொடர்கள்
புவியனைத்தும் போற்றத் தமிழ்மொழியைப் புகளில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற் குழைத்தல்! இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று அறிவித்தார்
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்
சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை” என்று சூளுரைத்தார்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்...
சாதி இரண்டொழிய வேறில்லை...
சாதியில் இழிவு கொண்ட மனிதர் இந்தியாவில் இல்லையே
வெள்ளை நிறத்தொரு பூனை
சாதிகள் இல்லையடி பாப்பா
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்
சொல்லில் உயர்வு தமிச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
ஏழை என்றும் அடிமை என்றும் எவனும், இல்லை சாதியில்
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாம்