TAMIL
- பிரதமர் நரேந்திர மோடி, 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று (03.01.2023) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
- இந்த ஆண்டின் இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருளானது, "அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி" ஆகும்.
- இந்த மாநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம், நிலையான வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு அடைவது சம்பந்தமாக விவாதங்கள் நடைபெறும்
- இந்த மாநாட்டில் இடம் பெறும் முழுமையான அமர்வுகளில், விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள், முன்னணி இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்
- இந்திய அறிவியல் மாநாடு முதல் அமர்வு 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் 108-வது ஆண்டு மாநாடு தற்போது நூற்றாண்டு கொண்டாடி வரும் ராஷ்டிரசந்த் துகடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
ENGLISH
- Prime Minister Narendra Modi inaugurated the 108th Indian Science Conference today (03.01.2023) through video presentation. The theme of this year's Indian Science Conference is "Sustainable Development with Empowerment of Women through Science and Technology".
- The conference will discuss sustainable development and women's empowerment through science and technology.
- The plenary sessions at the conference will be attended by Nobel laureates, leading Indian and foreign researchers, multidisciplinary experts and technologists from various fields including aerospace, defence, information technology and medical research.
- The first session of the Indian Scientific Conference was held in 1914. Its 108th annual conference is being held at the Rashtrasand Dukadoji Maharaj Nagpur University, which is currently celebrating its centenary.