கடல் கொள்ளை தடுப்பு மசோதா நிறைவேற்றம்
- கடல் கொள்ளையர்களை கடுமையாக தண்டிக்க வழிவகை செய்யும் கடற்கொள்ளை தடுப்பு மசோதா மக்களவையில் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது.
- இதனை தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இந்த மசோதாவில் கடல் கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிப்பதற்கான விதிகளை சேர்க்கப்பட்டுள்ளது.
- புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று ஜவஹர்லால் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்தி துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.
- தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
- மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ந. ராசையா நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார்.
- நேபாள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக, பிரதமா் ஷோ பகதூா் ஷா தேவுபா புதன்கிழமை தோந்தெடுக்கப்பட்டாா். அதையடுத்து, அந்த நாட்டில் புதிதாக அமையவிருக்கும் அரசில் அவா் அந்தக் கட்சி சாா்பில் பிரதமா் பதவியை ஏற்பது உறுதியாகியுள்ளது.
- நேபாள நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினா்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு கடந்த மாதம் தோதல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
- அதையடுத்து, 89 இடங்களைக் கைவசம் வைத்திருக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும், 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமா் புஷ்ம கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் மையம் கட்சியும் இணைந்து புதிய அரசை அமைக்கவுள்ளன.
- அந்த அரசில் பிரதமா் பதவியை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் இரண்டரை ஆண்டுகளுக்கும் மாவோயிஸ்ட் மையத் தலைவா் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளுக்கும் வகிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் பெண்களுக்கான 'நேசன்ஸ்' கோப்பை ஹாக்கி தொடர் - இந்திய அணி சாம்பியன்
- ஸ்பெயினில் பெண்களுக்கான 'நேசன்ஸ்' கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதின. இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை வசப்படுத்தியது.
- இத்தொடரில் பங்கேற்ற 5 போட்டியிலும் அசத்திய இந்திய பெண்கள் அணி, 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது. தவிர, 2023-24 புரோ ஹாக்கி தொடருக்கு இந்திய பெண்கள் அணி நேரடியாக தகுதி பெற்றது.