ஹிமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் தேர்வு
- மலை மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியான பா.ஜ., 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், சிம்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் சுக்லா, பூபேஷ் பாகேல், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
- ஹிமாச்சல் மாநில தேர்தல் பிரசார குழு தலைவரும், ராகுலின் தீவிர விசுவாசியுமான சுக்விந்தர் சிங், கட்சியின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- ஹிமாச்சலின் அடுத்த முதல்வராக சுக்விந்தர் சிங் பதவியேற்க உள்ளார். மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
- அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பதிப்பக குழுமமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.
- இந்நிறுவனத்தின் புதிய தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியான நிஹார் மாளவியா (48) நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போதைய சிஇஓ மார்கஸ் டோஹ்லே இம்மாத இறுதியில் பதவி விலகுவதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 1ம் தேதி நிஹார் மாளவியா பதவி ஏற்க உள்ளார்.
- மாளவியா கடந்த 2019ம் ஆண்டு முதல் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் அமெரிக்க கிளையின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியுமாக பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பாஜக 156 இடங்களில் வெற்றிபெற்று 7வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் சட்டமன்ற பாஜக தலைவராக, பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கவுள்ளார்.
- வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தியா-வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.
- இன்றைய போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 210 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் கைகோர்த்து அபாரமாக ஆடிய விராட் கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார்.
- இதன்மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 72வது சதத்தை பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் (1,214 நாட்கள்) பிறகு விராட் கோலி சதமடித்துள்ளார்.
- இன்று பதிவு செய்த சதத்தின்மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 71 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். 100 சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பெயினில் 23 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 9 பேர் பங்கேற்றனர்.
- ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் அமன் ஷெராவத் பங்கேற்றார்.
- அடுத்து நடந்த அரையிறுதியில் அமன், கிர்கிஸ்தானின் அல்மாசை சந்தித்தார். இதில் அமன் 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதில் துருக்கியின் துமானுடன் மோதினார்.
- துவக்கத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்திய அமன், 12-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக மல்யுத்தம் 23 வயது பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் அமன்.
- இத்தொடரில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது.