Type Here to Get Search Results !

TNPSC GROUP 1 PRELIMINARY EXAM 2022 - EXPECTED CUT OFF MARKS

  

  • டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வு எழுத, 1.31 லட்சம் பேர் வரவில்லை.தமிழகத்தில், துணை கலெக்டர் உட்பட 92 பணியிடங்களை நிரப்புவதற்காக, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது.
  • தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், மூன்று லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் அனுமதிக்கப்பட்டனர். 38 மாவட்டங்களில் காலை தேர்வு நடந்தது. 
  • தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் மட்டுமே எழுதினர்.ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்கள், 59.23 சதவீதம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர், அடுத்து பிரதான தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
  • இதையடுத்து இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங், டாக்டர் என்று பட்டப்படிப்பு படித்தவர்கள் என போட்டி போட்டு விண்ணப்பித்தனர். 
  • காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. எழுத்து தேர்வில் பொது அறிவில் 175 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. 
  • வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. 
  • தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். 
  • மேலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
  • தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். 
  • தற்போது தேர்வு எழுதியவர்கள் அடிப்படையில் 1 பதவிக்கு 2076 பேர் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மெயின் தேர்வில் பங்கேற்க கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
TNPSC Group 1 Preliminary Exam 2022 - Cutoff Mark

TNPSC Group - 1 Preliminary Exam 2022
Expected Cut off Marks (Based on No of Marks)
Note - for PSTM Candidate Cutoff Will be reduced to another 5 Marks

Male
Female
General
Above 158
Above 155
BC
Above 150
Above 145
MBC
Above 144
Above 141
BC(M)
Above 142
Above 138
SC
Above 138
Above 134
SC(A)
Above 135
Above 133
ST
Above 134
Above 130

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel