மீண்டும் இஸ்ரேல் பிரதமராக பதவி ஏற்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு
- மேற்காசிய நாடான இஸ்ரேலில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடக்கிறது.
- மொத்தமுள்ள 120 இடங்களில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி மற்றும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
- இதையடுத்து, 1996 - 99, 2009 - 21 என இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
- கோவையில் பசுமை தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில், தைவானுடன் தேசிய உற்பத்தி குழு மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது.
- இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ஸ்ரீராமுலு, செயலாளர் அண்ணாமலை மற்றும் தைவான் நாட்டின் எட்டு பேர் கொண்ட வல்லுனர் குழுவினர் பங்கேற்றனர்.
- தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவா் அணி வெள்ளிக்கிழமை வாகை சூடியது.
- இப்போட்டியில் இதற்கு முன் இரு முறை வெள்ளி வென்ற இந்தியா, தங்கம் வெல்வது இது முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில், சௌரவ் கோஷல், ரமீத் டாண்டன், அபய் சிங் அடங்கிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் குவைத்தை வீழ்த்தியது.
- அந்த ஆட்டத்தில் முதலில் ரமீத் 11-5, 11-7, 11-4 என்ற கணக்கில் அலி அராமெஸியை வீழ்த்த, அடுத்த ஆட்டத்தில் சௌரவ் 11-9, 11-2, 11-3 என்ற கணக்கில் அமா் அல்டாமிமியை தோற்கடித்தாா்.
- இந்திய விமானப்படைக்கும், சிங்கப்பூர் விமானப்படைக்கும் இடையேயான 11வது கூட்டு போர்ப்பயிற்சி கலைக்குந்தாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நவம்பர் 3ம் தேதி தொடங்கியது.
- இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரு நாட்டு விமானப்படைகளும் நவீன விமான சாகச பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.
- இதில் இந்திய விமானப்படையின் எஸ்யு - 30 எம்கேஐ, ஜாக்குவார், எம்ஐஜி-29, இலகு ரக தேஜாஸ் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்கின்றன. சிங்கப்பூர் விமானப்படை சார்பில் எப்-16, விமானம் பங்கேற்றுள்ளது.
- தேசிய எஸ்சி-எஸ்டி மைய திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட கண்காணிப்புக் குழுவின்ன் (எச்பிஎம்சி) 5வது கூட்டம் மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே தலைமையில் நடைபெற்றது.
- இணை அமைச்சர் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை இணை திரு பானு பிரதாப் சிங் வர்மா இணைந்து பங்கேற்ற இந்தக் கூட்டம் 3 நவம்பர் 2022 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் திரு. நாராயண் ரானே தலைமை வகித்தார்.