டெல்லியில் முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு 2022
- முஸ்லிம் அறிஞர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் பங்கேற்றனர்.
- இதில் தீவிரவாதத்தை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்
ஏ.ஏ.ஏ.ஐ., தலைவராக பிரசாந்த் குமார் தேர்வு
- ஏ.ஏ.ஏ.ஐ., எனப்படும் இந்திய விளம்பர ஏஜன்சிகள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கூடியது. அப்போது, 2022 - 23ம் ஆண்டுக்கான சங்க தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- இதில், 'குரூப் எம் மீடியா' நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் குமார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஹவாஸ்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராணா பரூவா, துணைத் தலைவராக தேர்வானார்.
- விஷன்தாஸ் ஹர்தாசனி, குணால் லாலானி, ரோஹன் மேத்தா, சந்திரமவுலி முத்து, ஸ்ரீதர் ராமசுப்ரமணியன், சசிதர் சின்ஹா, கே.ஸ்ரீனிவாஸ், விவேக் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக தேர்வாகினர்.
கொலிஜியம் பரிந்துரையை ஏற்று 2 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
- உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
- இதற்கிடையே, கடந்த 25ம் தேதி 20 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் அனுப்பிய கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.
- இதற்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
- நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம், ''கொலிஜியம் சிபாரிசு அளித்து விட்டால், அந்த விவகாரம் முடிந்து விட்டதாக கருத வேண்டுமே தவிர ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட கூடாது.
- இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளி விட வேண்டாம். சட்டம் இருக்கும் போது அதை முறையாக பின்பற்ற வேண்டும்'' என எச்சரிக்கை விடுத்தனர்.
- இந்நிலையில், கொலிஜியம் பரிந்துரையின் படி, வக்கீல்கள் சந்தோஷ் கோவிந்தராவ் மற்றும் மிலிந்த் மனோகர் சதாயே ஆகியோர் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
ரூ.5,069 கோடியில் மும்பை தாராவி மேம்பாடு ஒப்பந்தத்தை கைப்பற்றியது அதானி குழுமம்
- உலகின் மாபெரும் குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் 58,000 குடும்பங்களும், 12,000 நிறுவனங்களும் உள்ளன. அதானி குழுமம் முதல் கட்டமாக தாராவி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.5,069 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
- மொத்தம் ரூ.20,000 கோடியில் தாராவி பகுதி மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
- மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், நான் பார்த்து, கண்டு வியந்ததை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி பொங்க நான் அறிவிக்கின்றேன்.
சர்வதேச கீதை கருத்தரங்கில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்
- ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் இன்று நடைபெற்ற சர்வதேச கீதை கருத்தரங்கில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பங்கேற்றார்.
- மேலும், ஹரியானா முதலமைச்சரின் சுகாதார ஆய்வுத் திட்டம், அனைத்து பொது போக்குவரத்துகளுக்கும் மின்னணு வழியில் பயணச் சீட்டு பெறும் திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததோடு சிர்ஸாவில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.