435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணி
- விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின.
- முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
- ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
- உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
- தமிழகம் எடுத்த 506 ரன், லிஸ்ட் ஏ தொடரில் ஒரு அணியி அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 498 ரன் குவித்து படைத்த சாதனை நேற்று தகர்க்கப்பட்டது.
- விஜய் ஹசாரே தொடரில் கடந்த ஆண்டு மும்பை அணி புதுச்சேரிக்கு எதிராக 457 ரன் குவித்த சாதனையும் முறியடிக்கப்பட்டது.
- லிஸ்ட் ஏ ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை ஜெகதீசன் (277) வசமானது. முன்னதாக, 2002ல் கிளமார்கன் அணிக்கு எதிராக சர்ரே அணியின் அலிஸ்டர் பிரவுன் 268 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
- உலக அளவில் லிஸ்ட் ஏ ஒருநாள் ஆட்டத்தில் 435 ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, சாமர்செட் அணி 1990ல் டெவோன் அணிக்கு எதிராக 346 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
- விஜய் ஹசாரே தொடரின் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையும் ஜெகதீசன் வசமானது (15 சிக்சர்). இதற்கு முன் 2019-20 தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்சர் விளாசி இருந்தார்.
வாரத்தில் 3 நாட்கள் முட்டை, பிஸ்கட் - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
- கிராமப்புற வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தவதற்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
- மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான நடைபெற்ற இந்த 2வது ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கிராமப்புற வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
- கிராமப்புறங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார். அங்கன்வாடி மையங்களில் 1-2 வயதான குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை என்று இருந்தது. தற்போது 3 முட்டைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மேலும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய இலவச அரிசி வழங்குவதால் பட்டினியின்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நியாய விலைக்கடைகளின் தரத்தை உயர்த்தி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- இன்றைய முதல் செட்டில், 7-5, இரண்டாவது செட்டில் 6-3, என்று அதிரடி காட்டிய ஜொகோவவிச் இப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஜோகோவிச் 7 ஆண்டிற்குப் பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்றதார். இதன் மூலம் இவர் 6 வது முறையாக அவர் இப்படத்தை வென்றுள்ளார். இப்போட்டியில் வென்றதன் மூலம் அவருக்கு ரூ.39 கோடி பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.
19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு
- 19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு, பனாமாவின் செனிக் நகரத்தில் நவம்பர் (2022) 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- 10 கிலோ கிராம் எடையிலான ரோஸ்வுட் மரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அழிந்து வரும் இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாட்டின் அனுமதி தேவைப்படுகிறது.
- இந்தக் கட்டுப்பாடு காரணமாக இந்தியாவின் ரோஸ்வுட் மரத்தால் தயாரிக்கப்படும் அறைகலன் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது.
- இதன் காரணமாக ரோஸ்வுட் பொருட்களின் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 50,000 கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில், ரோஸ்வுட் பொருட்களின் ஏற்றுமதியின் அளவை அதிகரிப்பது குறித்து இந்தியா பரிந்துரைத்தது.
- இந்திய பிரதிநிதிகள் அளித்த நீண்ட விளக்கங்களுக்கு பிறகு 10 கிலோ கிராமுக்கு குறைவாக எடை கொண்ட ஒவ்வொரு ரோஸ்வுட் மரத்தாலான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.
- மேலும், மரத்தாலான பொருட்கள் மட்டுமே, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இரும்பு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள், இதில் சேர்க்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த நடவடிக்கை இந்திய கைவினைஞர்களுக்கும் அறைகலன் தொழில்துறைக்கும் பெரிய நிவாரணமாக உள்ளது.