36வது தேசிய விளையாட்டுப் போட்டி - 6வது நாள்
- தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
- ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய் கிருஷ்ணா, சக்தி, மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா கூட்டணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
- இதையடுத்து, பதக்கப்பட்டியலில் வெள்ளிக்கிழமை முடிவில் தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.
- சா்வீசஸ் 42 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஹரியாணா 29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், மகாராஷ்டிரம் 26 தங்கம், 26 வெள்ளி, 48 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
- இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
- இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும், இவற்றைத் தவிர மற்ற மதத்தை பின்பற்றுவோர் பட்டியலினத்தவராக கருத்தப்பட மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
- ஆனால், தங்கள் மதத்துக்கு மாறிய பட்டியலின மக்களுக்கும், அவர்களுக்கான சலுகைகள் வழங்க வேண்டும் என முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மத அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
- இதையடுத்து, வரலாற்று ரீதியாக பட்டியலினத்தை சேர்ந்த மதம் மாறியவர்களுக்கு அதற்கான அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் பல்கலை மானியக்குழு உறுப்பினர் பேராசிரியை சுஷ்மா யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி வளாகத்தில் அக்.,7, 8 முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் துவக்கி வைத்தார்.
- இந்த உச்சி மாநாட்டில் ரூ.10.44 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் உலகின் 3வது பணக்காரரும், இந்திய தொழிலதிபருமான கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.