மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி 7வது முறையாக இந்திய அணி சாம்பியன்
- மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய 7 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதின.
- லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.
- இந்த நிலையில் மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியான இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இதனால் இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.
- இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
- கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள ஜெசு நகரில், சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், இந்தாண்டுக்கான உலகின் பசுமையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
- இவற்றில், நம் நாட்டின் தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத், 'உலகின் பசுமை நகரம்' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- மேலும், 'பொருளாதார மீட்சி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பசுமை வாழ்வியல்' என்ற பிரிவிலும், ஹைதராபாத் நகரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஆறு பிரிவுகளில் ஹைதராபாதுக்கு விருது கிடைத்துள்ளதாக, சர்வதேச தோட்டக்கலை அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு, இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நகரம் ஹைதராபாத் மட்டுமே.
- அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
- மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் சர்வதேச நிதியம் மற்றும் நிதிக்குழுவின் கூட்டத்தில் நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று கலந்து கொண்டார்.
- மிகப்பெரிய பொருளாதாரங்களில் வளர்ச்சி குறைவு, புவி அரசியல் சூழலால் ஏற்பட்டுள்ள எல்லை தாண்டிய தாக்கங்கள், உணவு மற்றும் எரிசக்தி விலையேற்றத்தால் நிகழ்ந்த பணவீக்க அழுத்தம் உட்பட சர்வதேச பொருளாதாரம் முக்கிய இடர்பாடுகளால் சிக்கியுள்ள சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.