உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயில் புனரமைப்பு - நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி
- நாட்டில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
- இந்நிலையில் இந்த கோயிலை `மகா காலேஸ்வர் லோக்' என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவுசெய் யப்பட்டது. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.
- தற்போது, முதல்கட்டமாக ரூ.316 கோடிக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 900 மீட்டர் தூரத்துக்கு பிரகாரம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2வது உலக புவிசார் தகவல் மாநாடு 2022
- ஐக்கிய நாடுகள் சபையின் 2-வது உலக புவிசார் தகவல் மாநாடு-2022 ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
- உலக அளவில் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்துக்கு உறுதுணையான இரண்டு தூண்களாக விளங்கி வருவது தொழில்நுட்பம், திறமை மட்டுமே. கடைக்கோடியில் உள்ள கடைசி மனிதருக்கும் அதிகாரமளிக்கும் இலக்கை நோக்கி நாடு வீறு நடைபோட்டு வருகிறது.
- அந்த வகையில், வங்கிக்கணக்கு இல்லாத 45 கோடி பேருக்கு வங்கிச் சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம்.
- அதேபோன்று, காப்பீடு இல்லாத 13.5 கோடி பேருக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பிரான்ஸ் மக்கள் தொகையைவிட இரு மடங்கு அதிகம்.
- இதுதவிர, 11 கோடி குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளும், 6 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. வளர்ச்சி நடவடிக்கைகளில் யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
- டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சிறிய அளவிலான சாலையோர வர்த்தகர்கள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனையில் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.
- இந்தியா இளைஞர் சக்தியைஅதிகம் கொண்ட நாடு. எனவே அவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தாகம் அதிகம் உள்ளது.அதன் விளைவாகவே, உலகளவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
- மாநாட்டின் கருப்பொருளான 'உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக்கூடாது' என்பது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் காணக்கூடியதாக உள்ளது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் யு.யு.லலித், அடுத்த மாதம் 8ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என மத்திய அரசுக்கு அவர் பரிந்துரை அளிக்க வேண்டும்.
- அந்த வகையில், தன் பரிந்துரை கடிதத்தை யு.யு.லலித் மத்திய அரசிடம் அளித்தார். இதில், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி தனஞ்ஜயா ஒய்.சந்திரசூட், 63, பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.
- இதையடுத்து, அடுத்த மாதம் 9ம் தேதி, நாட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்க உள்ளார்.
- பன்னாட்டு நிதியம் அதன் உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து, 6.8 சதவீதமாக அறிவித்துள்ளது.
- கடந்த ஜூலையில், வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது 6.8 சதவீதமாக குறைத்துள்ளது.
- சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் என்றும், நிதியம் அறிவித்துள்ளது. மேலும், 2023ல், உலகில் பலர் பொருளாதார மந்தநிலை இருப்பதாக உணர்வர்.
- 2023ம் ஆண்டை பொறுத்தவரை அமெரிக்கா - 1%, ஜெர்மனி - (-0.3%), பிரான்ஸ் -0.7%, இத்தாலி- (-.02%), ஜப்பான் -1.6%, சீனா-4.4%, இந்தியா- 6.1%, பிரிட்டன் -0.3%, ரஷ்யா-(-2.3%) என்ற அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா மட்டுமே அதிகபட்சமாக 6.1% வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, கடந்த சில வாரங்களுக்கு முன் 6 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் தொடர்பான பரிந்துரையை ெசய்தது.
- அந்த பட்டியலில் உள்ள 6 பேரில் 3 பேரின் பெயர்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிபி வராலே கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி ஏஎம் மேக்ரே ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது. சுமார் 33 அணிகள் இதில் பங்கேற்றன. இதில் தமிழகமும் பங்கேற்றது.
- இதில் ஆடவர் தனிநபர் ஹேங்கிங் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன், 8.9 ஸ்கோரை பெற்று முதலிடம் பிடித்தார். இதே பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரர் ஒருவரும் 8.9 ஸ்கோரை எடுத்திருந்தார்.
- இருவருக்கும் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. 8.75 புள்ளிகளை பெற்ற உத்தரப் பிரதேச வீரருக்கு வெண்கலம் கிடைத்தது.
- அதேபோல மகளிருக்கான தனிநபர் ரோப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சங்கீதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மொத்தம் 9.05 ஸ்கோர் எடுத்திருந்தார் அவர்.
- தேசிய விளையாட்டு 36வது சீசன் குஜராத்தில் நடக்கிறது. 20 வது நாளான கலப்பு 'ரிலே டிரையத்லான்' போட்டியில் தமிழக அணி பங்கேற்றது. 250 மீ., நீச்சல், 7.8 கி.மீ., சைக்கிளிங், 2.6 கி.மீ., ஓட்டம் என மூன்று விளையாட்டுகள் இணைந்தது. இதை ஒரு மணி நேரம், 59 நிமிட நேரத்தில் முடித்த தமிழக அணி, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.
- ஹரியானா தங்கம்பெண்களுக்கான ஹாக்கி பைனலில் இந்திய அணி கேப்டன் சவிதா, 'சீனியர்' ராணி ராம்பால் இடம் பெற்ற ஹரியானா அணி, பஞ்சாப்பை சந்தித்தது.இதில் ராணி ராம்பால் கோல் கைகொடுக்க, ஹரியானா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் பெற்றது.
- ஆண்களுக்கான பைனலில் கர்நாடகா, உ.பி., மோதின. போட்டி 2-2 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்டில்' கர்நாடகா 4-3 என வென்று, தங்கம் கைப்பற்றியது.
- பெண்கள் வாலிபால் அரையிறுதியில் கேரள அணி 25-20, 25-14, 25-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் மேற்குவங்க அணி 25-14, 25-21, 25-18 என ராஜஸ்தானை வீழ்த்தியது.
- ஆண்கள் கால்பந்து பைனலில் கேரளா, மேற்கு வங்கம் மோதின. இதில் மேற்கு வங்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.
- பெண்களுக்கான குத்துச்சண்டை 'மிடில்வெயிட்' அரையிறுதியில் காலிறுதியில் அசாமின் லவ்லினா, குஜராத்தின் ருசிதா மோதினர். அபாரமாக ஆடிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
- ஆண்கள் 'வெல்டர்வெயிட்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் முன்னணி வீரர், அசாமின் ஷிவா தபா, 2-3 என்ற கணக்கில் சர்வீசஸ் அணியின் ஆகாஷிடம் தோல்வியடைந்தார்.
- பெண்கள் 'லைட்வெயிட்' பிரிவு அரையிறுதியில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜித் கவுர், 5-0 என அசாமின் பாசுமாட்டரியை வென்றார்.
- தேசிய விளையாட்டில் தமிழக அணி 25 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என, மொத்தம் 71 பதக்கங்கள் வென்று, பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- முதல் நான்கு இடங்களில் சர்வீசஸ் 116 (54 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம்), மஹாராஷ்டிரா 128 (34 தங்கம், 37 வெள்ளி, 57 வெண்கலம்), ஹரியானா 100 (32 தங்கம், 30 வெள்ளி, 38 வெண்கலம்), கர்நாடகா 87 (26 தங்கம், 23 வெள்ளி, 38 வெண்கலம்) உள்ளன.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா வெற்றி
- இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
- மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
- 100 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய அணி 19.1 ஓவர்களில் இந்திய அணி 105 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக சிராஜ் தேர்வு தேர்வானார்.
- ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி இந்திய கிரிக்கெட் அணி என்ற உலக சாதனையை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது
- நடப்பாண்டில் இந்திய அணி இதுவரை 38 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 38 போட்டிகளில் வென்று இந்த உலக சாதனையை பதிவு செய்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அந்த சாதனையை சமன் செய்துள்ளது
- சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளை கவுரவித்து வருகிறது. எனவே செப்டம்பர் மாதத்திற்கான வீரர், வீரங்கனைகள் பட்டியல் வெளியிட்டுள்ளது.
- அதன்படி, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிரந்த வீரராக இடம்பிடித்துள்ளார். டி-20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வான் இடம்பிடித்துள்ளார்.
- அதேபோல், சிறந்த வீராங்கனைகள் பட்டியலில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இடம்பிடித்துள்ளார்.