2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2022
TAMIL
- நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
- நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது.
- இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு, அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மனிதன் எங்கிருந்து வந்தான்? நமக்கு முன்னால் தோன்றிய மனிதனுக்கும் தற்போது பரிணாம மாற்றம் அடைந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கோணத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார் ஸ்வாண்டே பாபோ.
- ஹோமினின் என்று அழைக்கப்படும் அழிந்து போன முந்தைய காலத்து மனித இனத்தைப் பற்றி சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புடைய நியாண்டர்தால் (Neanderthal) என்ற அழிந்துபோன இனத்தின் மரபணுவை இவர் வரிசைப்படுத்தியுள்ளார்.
- மேலும் டெனிசோவா என்ற ஹோமினின்கள் பற்றி உலகிற்குக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சியில் முக்கியமாக மனித கண்டுபிடிப்பில் பெரிய அச்சாணியாகத் திகழக் கூடிய மரபணு பரிமாற்றத்தைப் பற்றிக் கண்டுபிடித்துள்ளார்.
- அழிந்துபோன ஹோமினின்கள் முதல் தொடங்கி 70,000 ஆண்டுகள் முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த ஹோமோ சேபியன்ஸ் வரை உள்ளவற்றின் மரபணு மாற்றத்தை இவர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்துள்ளார்.
- இவரின் இந்த ஆராய்ச்சி, அறிவியல் ஆராய்ச்சியில் புதிய வடிவத்தைத் தோற்றுவித்துள்ளது. மனித பரிமாற்றத்தில் இருக்கும் மரபணுக்கள் வேற்றுமையைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதர உயிரினங்களைக் காட்டிலும் மனிதன் தனித்துவம் அடைந்தவன் என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.
- நியாண்டர்தால்கள் டிஎன்ஏ மாதிரிகளை வைத்து இவர் நடத்திய ஆராய்ச்சி மூலம் மரபணு வேறுபாடுகளைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்று கேள்விக்கு ஒரு சரியான பாதையைத் தோற்றுவித்துள்ளது.
- மேலும் 2008 ஆம் ஆண்டு ஸ்வாண்டே பாபோ, சைபீரியாவின் தெற்குப் பகுதியில் டெனிசோவா என்ற குகையில், இவர் 40,000 வருடம் பழைமை வாய்ந்த கை எலும்பில் இருந்து எடுத்து டிஎன்ஏ மூலம் அழிந்துபோன ஹோமினின்கள் என்ற இனத்தைப் பற்றி கண்டுப்பித்துள்ளார். ஹோமினின்களை டெனிசோவா என்று அழைக்கின்றனர். இது ஒரு புதிய இனத்தையே உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
- மனித வரலாற்றில் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாக இவர் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் படபூடியான் ஆகிய இருவருக்கும், வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- The Nobel Prize is considered the highest prize in the world. The prize is awarded every year to those who have contributed outstanding inventions in the fields of peace, literature, physics, chemistry, economics and medicine.
- The Nobel Prize consists of a medal, a certificate and a cash prize of Rs 7.35 crore. This year's Nobel Prize in Medicine has been awarded to Sweden's Svante Pabo for his discoveries about the genomes of extinct hominins and human evolution.
- Where did man come from? Svante Pabo has been conducting research on the relationship between the man who appeared before us and the man who has evolved now.
- He has made an unlikely discovery about an extinct early human species known as hominin. He has now sequenced the genome of the Neanderthal, an extinct species closely related to humans.
- He also discovered Denisova, the hominin, to the world. His research has focused on the discovery of gene transfer, a major phenomenon in human innovation.
- Through his research, he has discovered and introduced to the world the genetic modification of everything from extinct hominins to Homo sapiens, which migrated from Africa 70,000 years ago.
- His research has created a new pattern in scientific research. This research is intended to reflect how humans are unique from other species by discovering genetic variation in human transmission.
- He discovered genetic differences through his research using DNA samples from Neanderthals. This research has paved the way to the question of where did man come from.
- And in 2008, in a cave called Denisova in Svante Babo, southern Siberia, he discovered a 40,000-year-old arm bone and DNA from an extinct species of hominin. Hominins are called Denisovans. It has introduced a new species to the world.
- He has been awarded this year's Nobel Prize in Physiology or Medicine for his discovery of the most important scientific discovery in human history.
- Last year, American scientists David Julius and Artum Patapoudian were awarded the Nobel Prize for inventing sensors that detect changes in the body through temperature and touch without touching the body.
2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PHYSICS 2022
TAMIL
- உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.
- அந்த வகையில், 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளாசர், ஆன்டன் ஸய்லிங்கர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'குவாண்டம்' தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த மூன்று பேரும் நோபல் பரிசு பெறுகின்றனர். சுவீடனில் டிச., 10ம் தேதி நடக்கும் விழாவில் பதக்கமும், 7 கோடி ரூபாய் ரொக்கமும் பரிசாக அளிக்கப்படும்.
- The Nobel Prize, the world's highest award, is awarded annually to outstanding achievements in the fields of medicine, physics, chemistry, literature, economics, and peace. Accordingly, the Nobel Prize for Physics in 2022 has been announced.
- Three scientists are receiving this year's physics prize. Alain Aspect, John F. Glaser and Anton Zeilinger have been awarded the Nobel Prize in Physics. All three are receiving Nobel Prizes for their research into 'quantum' information science.
- A medal and a cash prize of Rs 7 crore will be presented at a ceremony to be held in Sweden on December 10.
2022ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு
NOBEL PRIZE FOR CHEMISTRY 2022
TAMIL
- 1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது.
- ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
- அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த 3-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
- இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 'மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்' வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
- 'கிளிக் கெமிஸ்டரி' என்றழைக்கப்படும் இந்த முறையானது, டி.என்.ஏ., எனப்படும் மரபணுக்களை அடையாளம் காணுதல், புற்று நோய்க்கான மருந்துகள் தயாரித்தல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது. இந்த மூவரில், பெர்ரி ஷார்ப்ளஸ், 2001ம் ஆண்டும் நோபல் பரிசு வென்றுள்ளார்.
- இதன் வாயிலாக, இரண்டு முறை நோபல் பரிசு பெறும் ஐந்தாவது நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
- In 1901, the Nobel Prize was first awarded under 5 categories. Subsequently, in 1969, the prize for economics was added to the Nobel list with money donated by Ricks Bank. Nobel Prize is awarded once a year under 6 categories.
- Accordingly, the Nobel Prizes for the year 2022 have been announced in Stockholm, the capital of Sweden, since the 3rd. Only the Nobel Peace Prize will be announced in Norway.
- In this case, the selection committee has announced that the Nobel Prize for Chemistry will be awarded to 3 people. Accordingly, this year's Nobel Prize in Chemistry goes to Carolyn R. Bertosi (USA), Morton Meldal (Denmark) and K. To be distributed to Barry Sharpless (USA).
- This method, called 'click chemistry', is used to identify genes, called DNA, and to make drugs for cancer. Of these three, Perry Sharpless won the Nobel Prize in 2001 as well. With this, he becomes the fifth person to win the Nobel Prize twice.
2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR LITERATURE 2022
TAMIL
- ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசானது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
- உலகின் மிக உயரிய விருதுகள் ஒன்றான நோபல் பரிசு, பல்வேறு துறைகளில் குறிப்பிட்ட சாதனைகளை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டது.
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு (annie ernaux) அறிவிக்கப்பட்டுள்ளது. 'தனிப்பட்ட நினைவகத்தின் வேர்கள், பிரிவினைகள் மற்றும் கூட்டுக் கட்டுப்பாடுகளை வெளிப்படுத்தும் தைரியம் மற்றும் மருத்துவக் கூர்மைக்காக' வழங்கப்படுகிறது.
- அவரது எழுத்தில், பாலினம், மொழி மற்றும் வர்க்கம் தொடர்பான வலுவான ஏற்றத்தாழ்வுகளால் குறிக்கப்பட்ட வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் ஆராய்கிறார். ஆசிரியருக்கான அவரது பாதை நீண்டது மற்றும் கடினமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Every year the Nobel Prize is awarded in the fields of medicine, physics, chemistry, economics, peace and literature. The Nobel Prize, one of the world's highest awards, is given to those who have achieved specific achievements in various fields.
- Accordingly, the Nobel Prize for the current year is being announced. While the Nobel Prize has already been announced for Medicine, Physics and Chemistry, today the Nobel Prize for Literature was announced to a French writer.
- Nobel Prize for Literature has been announced to French author Annie Ernaux. Awarded for 'courage and clinical acumen in uncovering the roots, divisions and collective constraints of personal memory'.
- In her writing, she explores from different angles a life marked by strong inequalities related to gender, language and class. His path to teacherhood is reported to have been long and arduous.
2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR PEACE 2022
- மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடனிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளை தவிர இதர துறைகளுக்கான பரிசுகள் கடந்த 3ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான பரிசு அறிவிக்கப்பட்டது.
- அந்நாட்டில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை எதிர்த்து போராடி வரும் இவர், தற்போது பெலாரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- இவரை தவிர, இரண்டு மனித உரிமை அமைப்புகளான, 'ரஷ்யன் குரூப் மெமோரியல்' மற்றும் உக்ரைன் சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகியவற்றுக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Nobel Prizes are awarded annually in fields including medicine, physics, chemistry, literature, peace and economics.
- The Nobel Peace Prize is usually announced in Norway, a European country, and the Nobel Prize for other fields is usually announced in Sweden. Except for the fields of peace and economics, the prizes for other fields are being announced from the 3rd.
- The Nobel Peace Prize was announced yesterday in this line. Ales Bialiatsky, a human rights activist and lawyer from the Eastern European country of Belarus, was awarded the Peace Prize.
- He has been fighting against the violation of human rights that is happening in the country and is currently imprisoned in Belarus.
- Apart from him, two human rights organizations, the 'Russian Group Memorial' and the Center for Civil Rights of Ukraine, have also been announced to distribute the prize.
2022ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR ECONOMICS 2022
TAMIL
- மருத்துவம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.
- ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் விருதுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் மாதம் நடக்கும் நிகழ்வில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.
- பதக்கம் மற்றும் சான்றிதழுடன், 7.20 கோடி ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி முதல் விருது பெற்றோர் பெயர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரும், அந்நாட்டின், 'பெடரல் ரிசர்வ்' வங்கியின் முன்னாள் தலைவருமான பென் எஸ்.பெர்னான்கே மற்றும் அந்நாட்டை சேர்ந்த மேலும் இரு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டைப்விக் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
- வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இவர்கள் செய்த ஆய்விற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. வங்கி சரிவை தவிர்ப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவர்கள் செய்துள்ள ஆய்வில் சிறப்பாக வெளிப்பட்டு இருப்பதாக நோபல் விருது கமிட்டி தெரிவித்துள்ளது.
- The world's highest award, the Nobel Prize, is awarded annually to those who have made outstanding contributions in various fields including medicine, literature, and peace.
- The awards will be announced in Stockholm, Sweden. Awards are presented at an event in December.
- Along with a medal and certificate, a cash prize of Rs 7.20 crore is awarded. The names of the award parents are being announced gradually from last 3rd.
- Awards were announced for the fields of medicine, physics, chemistry, literature and peace. In this context, the Nobel Prize for Economics was announced.
- Ben S. Bernanke, an American economist and former chairman of the Federal Reserve Bank, and two other American economists, Douglas W. Diamond and Philip H. Dypwick, have been awarded the prize.
- The award is given for their research on banks and the economic crisis. The Nobel Prize Committee said that the importance of avoiding bank collapse is well revealed in their research.