ஹரியாணா மாநிலத்தில் ரூ.5,618 கோடி ரயில் திட்டம் - அமித் ஷா அடிக்கல் நாட்டினார்
- ஹரியாணாவில் பல்வால் முதல் சோனிபட் வரை 126 கி.மீ. தொலைவுக்கு அரைவட்ட வடிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம் ரூ.5,618 கோடி செலவில் மேற் கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்துக்கு அமைச்சர் அமித் ஷா பரிதாபாத்தில் அடிக்கல் நாட்டினார்.
- இந்நிகழ்ச்சியில், சோனிபட் மாவட்டம் பர்கி என்ற இடத்தில் ரூ.590 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலையை அவர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
- ரோட்டக் நகரில் ரூ.315.40 கோடி செலவில் 6 கி.மீ.தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள மேம்பால ரயில் பாதை, போன்ட்சிஎன்ற இடத்தில் ரூ.106 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றையும் அமித்ஷா திறந்து வைத்தார்.
- ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான 'சிந்தன் ஷிவிர்' எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடக்கி வைத்தார்.
- இதில் சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிந்தனையாளர்கள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. நாளை நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்கிறார்.
- தேசிய புலனாய்வு அமைப்பை திறம்பட மேலும் அவர்களின் அங்கிகாரத்தை திறம்பட செயல்படுத்த அனைத்து மாநிலங்களிலும் 2024க்குள் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும் என்று கூறினார்.
- “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
- இந்தோனேசியாவின் பாலியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகளவில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், எதிர்கால தலைமுறையினர் வாழ்வதற்கான சிறந்த மற்றும் ஆரோக்கியமான புவியை விட்டுச் செல்வதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
- எதிர்காலத்திற்கு உகந்த உலகளாவிய சுகாதார சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்தியா அளப்பரிய பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.