Type Here to Get Search Results !

TNPSC 9th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்
  • பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். 
  • வயது மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் ராணிக்கு அதிகரிக்கவே, சில காலமாக அவரது கவலைக்கிடமாக இருந்ததையடுத்து காலமானார்.
  • பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத்தின் மறைவையொட்டி, இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கும் எனவும் இதன் தொடர்ச்சியாக மூவர்ணக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும் அன்று ஒரு நாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் எனவும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம்
  • சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி வரும் 12-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். 
  • இந்நிலையில், அவரை கடத்தல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத் தலைவராக நியமித்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 
  • இவர் 4 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.
100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தி உள்ளது
  • நாடு முழுவதும் ஒன்றிய அரசின் நிதி மூலமாக கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • இதேபோல், நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு இல்லாத மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் நகர்ப்புற வேலைவாய்ப்பு என்ற திட்டத்தை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தி உள்ளது. 
  • இந்த திட்டத்துக்கு 'இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்,' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். 
  • 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதி வாய்ந்தவர்கள். 
  • பட்ஜெட்டில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் 2.5 லட்சம் குடும்பங்கள், இந்த வேலைக்காக முன்பதிவு செய்துள்ளன. 
  • இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் மற்றும் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்
  • ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் பங்கேற்ற ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் (24 வயது) தனது முதல் எறிதலில் தவறிழைத்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் 88.00 மீட்டர், 86.11 மீ., 87.00 மீ., மற்றும் 83.60 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். 
  • 2வது முயற்சியில் அவர் 88.00 மீட்டருக்கு ஈட்டி எறிந்தது அதிகபட்சமாக அமைந்து தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. 
  • ஒலிம்பிக்சில் வெள்ளி வென்ற ஜாக்கப் வட்லேச் (செக் குடியரசு) 86.94 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்தார். 
  • ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (83.73 மீ.) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 
  • டயமண்ட் லீக் பைனல்ஸ் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா - ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
  • நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தில் கிழக்காசிய நாடான மங்கோலியா பயணத்தை முடித்து விட்டு ஜப்பானுக்கு சென்றார்.
  • அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்தனர்.
  • ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2 பிளஸ் 2 கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.
  • பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா - ஜப்பான் இடையே புரிந்துணவு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • ஜப்பான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் ராணுவ அமைச்சர் யசுகாசு ஹமாடா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, இன்ஃபிளேட்டபிள் ஏரோடைனமிக்ஸ் டெஸிரேட்டர் (IAD) என்னும் கருவியை முன்னதாகப் பரிசோதித்தது
  • வேற்று கிரகத்தில் செலுத்தப்படும் விண்கலம் பாதுகாப்பாகத் தரையிரங்க வசதியாக வேகத்தைக் குறைக்கும் இந்தக் கருவியை சோதனை செய்து வெற்றிபெற்றுள்ளது.
  • இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரோவின் முக்கியஸ்தர்களான உன்னிகிருஷ்ணன் நாயர், வி.நாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 
  • செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நமது விண்கலம் நுழைந்து ஏரோடைனமிகல் முறையில் வேகத்தைக் குறைத்து மெதுவாக தரை இறக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐஏடி.
  • ஒரு விண்கலம் வேற்று கிரகங்களுக்கு சென்று வளிமண்டலத்தில் நுழைந்து பாதுகாப்பாக மேற்பரப்பில் தரை இறக்கும் சோதனைகள் பல நடைபெற்று வருகிறது. 
  • வளிமண்டலத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் சோதனைகள் வெற்றிபெற்றன. 
  • அதன் அடுத்தகட்டமாக விண்கலத்தை பத்திரமாக தரை இறக்கும் சோதனைதான் இப்போது நடைபெற்று வருகிறது. 
  • தும்பா ஏவுதளத்தில் இருந்து நண்பகலில் ஏவப்பட்ட ஒரு சவுண்டிங் ராக்கெட்டில் இந்தத் தொழில்நுட்பப் பரிசோதனை நடத்தப்பட்டது. 
  • ராக்கெட் இந்த வேகம் குறைக்கும் கருவி பூமியில் இருந்து 84 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, பெரிதாக்கப்பட்டு வளிமண்டலத்தில் இருந்து கீழே விடப்பட்டது. 
  • ஐஏடி தொழில்நுட்பம் எதிர்காலத்தில் வீனஸ் மற்றும் மார்ஸ் மிஷன்களின்போது பேருதவியாக இருக்கும் எனவும் பல இடங்களில் கட்டுமான செலவைக் குறைக்க உதவும் என்றும் இஸ்ரோ சேர்மன் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு
  • ஆப்பிள் செல்போனுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது.
  • டாடா எலக்டரானிக்ஸ் எனும் செல்போன் உதிரி பாகங்கள் தொழிற்சாலையை ஓசூரில் தொடங்கவுள்ளது டாடா குழுமம். 
  • டாடா நிறுவனம் தொடங்கியுள்ள தொழிற்சாலைக்கு 500 ஏக்கர் நிலத்தை தமிழநாடு அரசு வழங்கியுள்ளது. 
  • டாடா நிறுவனம் தொடங்கியுள்ள புத்தி தொழிற்சாலை மூலம் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.
பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கிவைத்தார்
  • பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (செப்டம்பர் 09, 2022) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
  • இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத் தலைவர், “பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்திற்கு இந்திய குடிமக்கள் அனைவரும் அதிக அளவில் முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். 
  • நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு எண்ணிக்கை உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 20 சதவீதம். 
  •  ஆனால் உலக அளவில் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  • பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.
  • “நீடித்த வளர்ச்சியின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நாடுகளும் காசநோயை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்தது. 
  • ஆனால் மத்திய அரசின் சிறந்த செயல்பாடுகளினால் வரும் 2025 ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் கூறினார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் ‘ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை’ கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
  • உள்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு நிஷித் பிரமானிக், கலாச்சார மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சிலேகி உட்பட பலர் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel