ஜூலியர் பேர் கோப்பை - அர்ஜூன் எரிகைசியை வென்று சாம்பியன் ஆனார் கார்ல்சன்
- இணையதளம் வாயிலாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டங்கள் இரு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தார்.
- இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்தாலே கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற சூழ்நிலையே இருந்தது.
- எனினும் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களை வென்று அசத்தினார் கார்ல்சன். முதல் ஆட்டத்தில் 48-வது நகர்த்தலின் போதும், 2-வது ஆட்டத்தில் 52-வது நகர்த்தலின் போது அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார் கார்ல்சன்.
- ஜூலியர் பேர் கோப்பைக்கான செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி பட்டம் வென்றார்.
- கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது தசரா விழாவை கொண்டாட தொடங்கினர்.
- நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தசரா திருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
- கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்ட தசரா விழா, இந்த ஆண்டு ஆடம்பரமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- இந்நிலையில் 412வது மைசூரு தசரா விழாவை குடியரசுச் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்வில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- இக்குழு, ஜூன் 27ல் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை அதே நாளில், அமைச்சரவை பார்வைக்கு வைக்கப்பட்டது.அதன்பின், பள்ளி மாணவர்களிடம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு; பொது மக்களிடம் இ - மெயில் வழியே பெறப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டன.
- அவற்றின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டது. இது, ஆக., 29ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அவசர சட்டத்தை மேலும் செம்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
- அதன்படி, செம்மைப்படுத்தப்பட்ட அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இத்தாலியின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பிரதமர் மரியோ டிராகி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
- இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி 26 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
- அதன் கூட்டணி கட்சிகளான, மேத்யூ சால்வினி தலைமையிலான லீக் கட்சி 9 சதவீதம், சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான போர்ஜா இத்தாலியா கட்சி 8 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன.
- தீவிர வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளதால், அவர் இத்தாலியின் முதல் பெண் பிரதமாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
- இந்த நிலையில் அகழாய்வு பணியில் மேலும் அதிசயமாக வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள்
- ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் தெற்கு தயார்நிலை செயல்திட்ட வருடாந்திர பயிற்சியில் பங்கேற்பதற்காக ஐ.என்.எஸ் சுனைனா கப்பல் செப்டம்பர் 24 அன்று செஷல்சின் விக்டோரியா துறைமுகத்தை சென்றடைந்தது.
- இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இந்தப் பங்கேற்பு மீண்டும் வலியுறுத்தும். ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் இந்திய கடற்படை கப்பல் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் சிறப்பம்சம்.
- ஒருங்கிணைந்த கடல்சார் படைகளால் நடத்தப்படும் திறன் கட்டமைப்பு பயிற்சிகளில் சக கூட்டாளியாக இந்தக் கப்பல் கலந்து கொள்ளவிருக்கிறது.
- அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிக் குழுவுடன் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இந்தக் கூட்டு பயிற்சியில் பங்கேற்கும்.