ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் சர்வதேச அளவில் மாற்றம் - ஜெய்சங்கர்
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் 77வது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
- பின்னர் அவர் அளித்த பேட்டியில், 'ஐநா.வில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பல காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை இந்த பிரச்னையில் நிச்சயமான மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.
- ஐநா சபை பொது விவாதத்தில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் பைடன், ஐநா கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத பிரதிநிதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
- இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா மற்றும் பல நாடுகள் இந்தியாவின் பெயரை குறிப்பிட்டுள்ளன'' என்றார். ஐநா கூட்டத்தில் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக தகுதி உடையவர்கள் என்றும், இந்நாடுகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
துலீப் கோப்பை கிரிக்கெட் - மேற்கு மண்டலம் சாம்பியன்
- எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 270 ரன், தெற்கு மண்டலம் 327 ரன் குவித்தன. 57 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய மேற்கு மண்டலம் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
- இதைத் தொடர்ந்து, 529 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தெற்கு மண்டலம் 71.2 ஓவரில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- மேற்கு பந்துவீச்சில் ஷாம்ஸ் முலானி 4, உனத்கட், அதித் ஷேத் தலா 2, கஜா, தனுஷ்கோடியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 249 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மேற்கு மண்டல அணி துலீப் கோப்பையை முத்தமிட்டது.
- ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜெய்தேவ் உனத்கட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சண்டிகரில் உள்ள விமான நிலையத்துக்கு பகத் சிங்கின் பெயர் - பிரதமர் அறிவிப்பு
- ஒவ்வொரு மாதத்தின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமையில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசி வருகிறார்.
- அதன்படி, நேற்று அவர் ஆற்றிய உரையில் வருமாறு - நாட்டின் சிறந்த குடிமகன். 'அமிர்த மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு முக்கியமான நாளாக செப். 28ம் தேதி பகத் சிங்கின் பிறந்தநாள் வருகிறது.
- இதை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில், பஞ்சாப்பில் உள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் கோப்பை வென்றது
- இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடந்தது.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. சாம்ஸ் (28), கம்மின்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.
- இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
- ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, நடப்பு ஆண்டில் பங்கேற்ற 29 'டி-20' போட்டிகளில் 21 வெற்றி, 7 தோல்வியை பெற்றது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
- இதன்மூலம் சர்வதேச 'டி-20' அரங்கில், ஒரு சீசனில் அதிக வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் பாகிஸ்தானை (20 வெற்றி, 2021 சீசன்) முந்தி முதலிடம் பிடித்தது. 33 வெற்றிரோகித் தலைமையிலான இந்திய அணி, சர்வதேச 'டி-20' அரங்கில் 33வது வெற்றியை பதிவு செய்தது.
- இதன்மூலம் சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் பட்டியலில் கோஹ்லியை (32 வெற்றி) 2வது இடம் பிடித்தார் ரோகித்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 4 ஆண்டுகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் 1 ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு-நாள் ஆரோக்கிய மந்தன் 2022 திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (2022, செப்டம்பர் 25) ஆயுஷ்மான் பாரத் திட்டம் 4 ஆண்டுகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் 1 ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு-நாள் ஆரோக்கிய மந்தன் 2022 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
- மத்திய அமைச்சர், இந்த திட்டத்தை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் பால், உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் தன் சிங் ராவத் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர் எஸ் சர்மா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
- மிகப்பெரிய உலகளாவிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்களாக இந்த திட்டத்தின் பயனாளிகள் தான் இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட டாக்டர் மன்சுக் மாண்டவியா, நாட்டில் 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 19 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் 24 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் கார்டு எண்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.