ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு குஜராத்தி மொழி படம் பரிந்துரை
- ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் 'ஆஸ்கர் விருது' உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான போட்டியில் பங்கேற்க, எல்லா நாடுகளிலும் இருந்தும் சிறந்த திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்படும்,
- இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு, குஜராத்தி மொழியில், பான் நளின் இயக்கத்தில் தயாரான செல்லோ ஷோ என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் லாஸ்ட் பிலிம் ஷோ என்ற தலைப்பில், மத்தியஅரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- இந்த திரைப்படம் அக்., 14ல் நாடு முழுதும் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப் படம் ஏற்கனவே, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடந்த 66வது உலகத் திரைப்பட விழாவில் பல பிரிவுகளில் விருதுகள் வாங்கியுள்ளது.
- நாட்டின் முன்னணி உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 2022- - 27ம் ஆண்டுக்கான செயல் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தலைமையில் நடந்தது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.