எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியல் தயாரிக்க முடிவு - ஷாங்காய் மாநாட்டில் கூட்டு தீர்மானம்
- இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம் பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்தது.
- இதில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 2 நாள் மாநாடு முடிந்ததைத் தொடர்ந்து, 8 நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட மாநாட்டின் கூட்டு தீர்மானம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
- பிரதமர் மோடி உட்பட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
- பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் அதன் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
- தீவிரவாதம், பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிப்பாட்டை உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், தீவிரவாதம் பரவுவதற்கு சாதகமான சூழலை தடுப்பதற்கும், தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கும் வழிகளை துண்டிப்பதற்கும், தீவிரவாத அமைப்புகளில் ஆட்சேர்ப்பு மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளன.
- இதற்காக, தேசிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்து அடிப்படையில், எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்குவதற்கான பொதுவான கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவில் வாழ்ந்து வந்த சிவிங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ம் ஆண்டு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- இந்நிலையில், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 3 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகளை இந்தியா கொண்டு வர 2009ல் திட்டமிடப்படப்பட்டது. அதன்படி, போயிங் 747 சிறப்பு சரக்கு விமானம் மூலமாக 8 சிவிங்கி புலிகள், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியருக்கு கொண்டு வரப்பட்டன.
- அங்கிருந்து, 2 ஹெலிகாப்டர் மூலமாக சியோப்பூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவுக்கு அவை கொண்டு வரப்பட்டன. பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு கூண்டில் இருந்து அவற்றை திறந்து விட்டார்.
- இந்தியாவில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கால் பதித்த சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இவற்றின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இவற்றின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
- அமெரிக்க பெடரல் வங்கி, பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்கிலாந்து அடுத்த வாரம் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்த இருக்கும் நிலையில் உலக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
- உலகில் உள்ள பல நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரேமாதிரியான நிகழ்வைப் பார்த்தது இல்லை.
- கடனுக்கான வட்டிவீதத்தை மத்திய வங்கிகள் உயர்த்தும்போது, வங்கிகளில் கடன் பெறுவது கடினமாகும், இதன் மூலம் விலைவாசி குறையலாம். ஆனால் மக்கள் கடன் பெறுவது கடினமாகும் அல்லது கடன் பெறுவது குறையும். இதனால் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும்.
- கடந்த 1970களுக்குப்பின் உலகப் பொருளாதார வளர்ச்சி மிகவும் தாழ்வாகச் செல்கிறது. ஆய்வுகளின்படி, உலகின் 3 மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்கா, சீனா, ஐரோப்பா நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியிருக்கிறது.
- இந்த சூழலில், உலகப் பொருளாதாரத்தில் அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று கணிக்கிறோம். ஆதலால், உலகில் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் நடவடிக்கையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறி, தெளிவான முடிவுகளை எடுக்க வேணடும். இதன் மூலம் பொருளாதாரம் மந்நிலைநோக்கி நகர்வதைக் தடுப்பது அவசியம்" எனத் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர் வங்கி இருமுறை வட்டிவீதத்தை உயர்த்தியும், இன்னும் விலைவாசியும், பணவீக்கமும் குறையவில்லை. இதனால், அடுத்தவாரம் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.
- வட்டிவீதம் தொடர்ந்து உயரும்பட்சத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் பின் இழுக்கப்பட்டு, அது மந்தநிலைக்கு இட்டுச் செல்லும். அதன்பின் பொருளாதார வளர்ச்சி மீண்டெழுவதற்கு நீண்டகாலமாகும்.