இந்தியாவின் மிகச்சிறந்த பூங்கா விருது பெற்ற வண்டலூர் பூங்கா
- சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த உயிரியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
- சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவைகளில் 82 சதவீத புள்ளிகளை சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த உயிரியல் பூங்காவில் தற்போது புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' அமைந்துள்ள நிலையில், சிறந்த பூங்கா எனும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது பூங்காவுக்கு புதுப்பொலிவை அளித்துள்ளது.
- 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியில் சிறப்பாக விளையாடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
- இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. ஆனால் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.
- பின்னர் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
- 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி தற்போது ஆசிய கோப்பை வென்றது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ். அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.
- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடி இருந்தார். 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியை அவர் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
- 1973 முதல் இதுவரையிலான ATP தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மிக இளம் வயது வீரர் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளார் கார்லோஸ் அல்கராஸ். கடந்த 2020 முதல் நடால், ஜோகோவிச், மெத்வதேவ் மற்றும் அல்கராஸ் ஆகியோர் டென்னிஸ் ரேங்கிங் பிரிவில் முதலிடத்தில் இருந்துள்ளனர்.
- யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (28 வயது, 5வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (21 வயது, போலந்து), அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
- 2வது செட்டில் ஜெபர் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த நிலையில், ஸ்வியாடெக் 6-2, 7-6 (7-5) என நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 51 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- யுஎஸ் ஓபனில் ஸ்வியாடெக் முதல் முறையாக பட்டம் வென்றுள்ளார். நடப்பு சீசனில் இது அவர் வெல்லும் 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். பிரெஞ்ச் ஓபனில் 2 முறை (2020, 2022), யுஎஸ் ஓபன் (2022) என மொத்தம் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை இகா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.