தகைசால் தமிழர் 2021
- தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்ளைப் பெருமைப்படுத்தும் வகையில், 2021 -ஆம் ஆண்டு முதல் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது.
- இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும் ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
- "தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர். நல்லகண்ணுவுக்கு, ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச்சான்றிதழும், வரும் சுதந்திர நாள் விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குவார்.
காமன்வெல்த் விளையாட்டின் 10,000 மீட்டர் நடை ஓட்டம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரியங்கா
- 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 10,000 மீட்டர் நடை ஒட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
- இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி, பாவ்னா ஜாட் ஆகியோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் பிரியங்கா 10,000 மீட்டர் தூரத்தை 43 நிமிடங்கள் 38.83 விநாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- பிரியங்காவின் இந்த வெள்ளிப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்
- காமன்வெல்த் தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். உலக நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் இது அவரது முதல் பதக்கமாகும்.
- பா்மிங்ஹாம் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்துள 2ஆவது பதக்கம் இதுவாகும். முன்னதாக, உயரம் தாண்டுதலில் தேஜஸ்வின் சங்கா் வெண்கலம் வென்றுள்ளாா்.
- தற்போது வெள்ளி வென்றிருக்கும் ஸ்ரீசங்கா், காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
- ஏற்கெனவே 1978 எட்மான்டன் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சுரேஷ் பாபு வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- பா்மிங்ஹாமில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் சிறந்த முயற்சியாக 8.08 மீட்டா் தாண்டினாா். முதலிடம் பிடித்த பஹாமாஸ் வீரா் லகான் நய்ரனும் அதே தூரத்தை சிறந்த முயற்சியாக எட்டியிருந்தாா்.
- போட்டி விதிகளின்படி இருவா் ஒரே அளவை எட்டும் பட்சத்தில், அவா்களில் 2-ஆவது சிறந்த முயற்சி கொண்டிருப்பவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2-ஆவது சிறந்த முயற்சியாக ஸ்ரீசங்கா் 7.84 மீட்டரும், லகான் 7.98 மீட்டரும் கொண்டிருந்தனா். எனவே விதிகளின் அடிப்படையில் தங்கம் லகானுக்குச் சென்றது.