உலகின் அதிக சம்பளம் வாங்கும் நாடுகள் பட்டியல்
- CEOWORLD இதழ் வரிக்குப் பிறகு சராசரி நிகர சம்பளங்களின் பட்டியலை வெளியிட்டது, இது 2022-ல் உலகின் மிக உயர்ந்த மற்றும் குறைந்த சம்பளத்தை வெளிப்படுத்தியுள்ளது.
- இந்த பட்டியலின் படி, முதல் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தில் சராசரி மாத நிகர சம்பளம் 6,142.10 அமெரிக்க டொலர்களாகும். ஆச்சரியப்படும் விதமாக, சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதன் சராசரி மாத நிகர சம்பளம் 4,350.79 அமெரிக்க டொலர்களாகும்.
- சிங்கபூரை தொடர்ந்து, அவுஸ்திரேலியா (US$4,218.89), அமெரிக்கா (US$3,721.64) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (US$3,663.27) ஆகியவை இடம்பிடித்துள்ளன.
- இதற்கு நேர்மாறாக, குறைந்த சராசரி மாதாந்த நிகர சம்பளத்துடன் இலங்கை கடைசி இடத்தை பிடித்துள்ளது. அங்கு சராசரி மாதாந்த நிகர சம்பளம் 143.62 அமெரிக்க டொலர் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, இலங்கை பணமதிப்பில் ரூ. 51716.08 ஆகும்.
- அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் US$163.17 மற்றும் நைஜீரியா US$166.33 குறைந்த சராசரி மாதாந்த நிகர சம்பளத்துடன் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புனேயில் கேபிஐடி-சிஎஸ்ஐஆர் -ஆல் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை அறிமுகப்படுத்தினார்.
- பிரதமர் மோடியின் ஹைட்ரஜன் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ற வகையில் மலிவான மற்றும் அணுகக்கூடிய தூய்மையான எரிசக்தியில் இயங்கக்கூடியதாக இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
- பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இது சுத்திகரிப்புத் தொழில், உரத் தொழில், எஃகுத் தொழில், சிமென்ட் தொழில் மற்றும் கனரக வணிகப் போக்குவரத்துத் துறையிலிருந்து உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.
- பல்கேரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் தங்கப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவா் படைத்தாா்.
- மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்ட அன்டிம், இறுதிச்சுற்றில் 8-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அட்லின் ஷகாயேவாவை சாய்த்தாா்.
- இதர பிரிவு இறுதிச்சுற்றுகளில், 65 கிலோ பிரிவில் பிரியங்கா 0-8 என்ற கணக்கில் ஜப்பானின் மஹிரோ யோஷிடேக்கிடமும், 62 கிலோ பிரிவில் சோனம் மாலிக் 0-6 என ஜப்பானின் நோனோகா ஒஸாகியிடமும், 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக் 1-3 என ஜப்பானின் அயானோ மோரோவிடம் வீழ்ந்து வெள்ளி பெற்றனா்.
- வெண்கலப் பதக்கச் சுற்றுகளில், 72 கிலோ பிரிவில் ரீதிகா 4-3 என டுனீசியாவின் ஜாய்னெப் ஸகேயரையும், 57 கிலோ பிரிவில் சிதோ 11-5 என துருக்கியின் மெல்டா டொனெக்கியையும், 50 கிலோ பிரிவில் பிரியான்ஷி ரஜாவத் 12-4 என மங்கோலியாவின் முங்கெரெல் முங்க்பாத்தையும் சாய்த்து பதக்கம் பெற்றனா்.
- இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 160 புள்ளிகளோடு 2-ஆம் இடம் பிடித்தது. இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வருவதும் இதுவே முதல் முறையாகும். ஜப்பான் 230 புள்ளிகளுடன் முதலிடத்தையும், அமெரிக்கா 124 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தையும் பிடித்தன.
- தாய்லாந்தில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றது.
- முக்கிய போட்டியாளா்கள் வரிசையில், ஆடவா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்எல்4 பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரமோத் பகத்/சுகந்த் கடம் கூட்டணி 21-18, 21-13 என இந்தோனேசியாவின் டுவியோகோ டுவியோகோ/ஃப்ரெடி சேத்தியாவன் இணையை தோற்கடித்தது.
- ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுகளில் இந்த இருவரும் வெள்ளி பெற்றனா். அதில் பிரமோத் பகத் 13-21, 19-21 என இங்கிலாந்தின் டேனியல் பெத்தெலிடமும், சுகந்த் கடம் 2-21, 17-21 என பிரான்ஸின் லூகாஸ் மஸுரிடமும் வெற்றியை இழந்தனா்.
- மகளிா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவு இறுதிச்சுற்றில் மன்தீப் கௌா் 20-22, 21-19, 21-14 என சக இந்தியரான மனீஷா ராமதாஸை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
- எனினும், அதே மனீஷா ராமதாஸ் எஸ்யு5 பிரிவு இறுதிச்சுற்றில் 20-22, 21-12, 21-19 என ஜப்பானின் கேடே கமெயாமாவை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினாா். இது தவிர, மற்றொரு இந்தியரான நித்யஸ்ரீ சுமதி சிவன் எஸ்ஹெச்6 பிரிவு இறுதிச்சுற்றில் 21-9, 24-22 என இங்கிலாந்தின் ரேச்சல் சூங்கை வென்றாா்.
- மகளிா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 இறுதிச்சுற்றில் இந்திய ஜோடியான மானசி/சந்தியா விஸ்வநாதன் 20-22, 19-21 என தாய்லாந்தின் நிபடா சேன்சுபா/சனிதா ஸ்ரீநவகுல் இணையிடம் தங்கத்தை இழந்து வெள்ளி பெற்றது.