தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு கால்நடை பல்கலை. - அமெரிக்க பல்கலை. ஒப்பந்தம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கையெழுத்து
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவன வளர்ச்சி திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10 இளநிலை மாணவர்கள் கடந்த 2019 நவம்பர் முதல் 2020 ஜனவரி வரை 3 மாதங்களுக்கு ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றுள்ளனர். அதேபோல், அங்கிருந்து 6 மாணவர்கள் 2019 ஜூன், ஜூலையில் 31 நாட்களுக்கு இங்கு வந்து மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றனர்.
- கரோனா பரவலால் இந்த பரிமாற்ற திட்டத்தை தொடர முடியாமல் இருந்தது. இதற்கிடையில் இந்த ஆண்டில் முடிவடைய இருந்த ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
- இந்நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக்கழகத் துணைவேந்தர் க.ந.செல்வக்குமார், ஒக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழக கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் கார்லோஸ் ரிஸ்கோ ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
மொத்த விலை பணவீக்கம் ஜூலை 2022
- மே மாதத்தில், அதுவரை இல்லாத அளவுக்கு 15.88 சதவீதமாக உயர்ந்து இருந்தது.இந்நிலையில், தற்போது ஜூலையில் 13.93 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் குறைவானதாகும்.
- மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வந்தபோதும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், அதாவது கடந்த 16 மாதங்களாக, இன்னும் இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது.
- கடந்த ஜூலையில் ஓரளவு குறைந்துள்ளதற்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்கள் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 14.39 சதவீதமாக இருந்தது, ஜூலையில் 10.77 சதவீதமாக குறைந்தது தான்.
- குறிப்பாக, காய்கறிகள் விலை 56.75 சதவீதத்திலிருந்து, 18.25 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகிய பிரிவுகளில், பணவீக்கம் ஜூன் மாதத்தை விட, ஜூலையில் அதிகரித்துள்ளது.
- ரிசர்வ் வங்கி, அதன் ரெப்போ வட்டி விகிதத்தை, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கிறது. கடந்த ஜூலையில், சில்லரை விலை பணவீக்கம் 6.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய நாடுகள் வகுத்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு இணங்க இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதற்காக தொழில்துறை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலியலுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காக மந்தன் தளத்தை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியுடன் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினர் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பை வழங்குவதற்காக விடுதலையின் 75-ஆவது ஆண்டு அமிர்த பெருவிழாவை முன்னிட்டு இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
- முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமூக தாக்கத்தின் புதுமை மற்றும் தீர்வுகளின் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த மந்தன் தளத்தால் இயலும்.
- பங்குதாரர்கள் இடையேயான கலந்துரையாடல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக வசதி போன்றவற்றிற்கு இந்தத் தளம் வழிவகை செய்வதோடு, சமூக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடையீடுகள் உட்பட ஏராளமான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் இடையீடுகளில் ஏற்படும் சவால்களையும் இந்தத் தளம் பகிர்ந்து கொள்ளும்.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் & கருவிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
- எதிர்கால காலாட்படை சிப்பாய்க்கான சாதனம் (F-INSAS), உள்ளிட்ட புதிய தலைமுறை கண்ணிவெடியான நிபுன், மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனங்கள், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.