Type Here to Get Search Results !

தமிழக அரசின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது (அ) திருவள்ளுவா் திருநாள் விருது / Tamil Nadu Government Chitrait Tamilputhandu Award (or) Thiruvalluu Thirunal Award



சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்

  • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்க ஓவ்வொரு ஆண்டும் 71 விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது
  1. கபிலர் விருது - முனைவர் அ.லலிதா சுந்தரம்
  2. உ.வே.சா. விருது - மருது அழகு ராஜா
  3. கம்பர் விருது - முனைவர் செ.வை. சண்முகம்
  4. சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையன்
  5. ஜி.யு.போப் விருது - ஜெ. நாராயணசாமி
  6. உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு.முகம்மதலி
2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது
  1. கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்
  2. உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்
  3. கம்பர் விருது - கோ.செல்வம்
  4. சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன்
  5. ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)
  6. உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர்
  7. இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்
2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலக தமிழ்ச் சங்க விருதுகள் 
  1. இலக்கிய விருது - 2016 நா.ஆண்டியப்பன்சிங்கப்பூர். 
  2. இலக்கண விருது - 2016 பெஞ்சமின் லெபோபிரான்ஸ். 
  3. மொழியியல் விருது - 2016 முனைவர் சுபாஷினிஜெர்மனி. 
  4. இலக்கிய விருது - 2017 முனைவர் சயதிரிகா சுப்ரமணியன்ஆஸ்திரேலியா. 
  5. இலக்கண விருது - 2017 உல்ரிகே நிகோலசுஜெர்மனி. 
  6. மொழியியல் விருது - 2017 மகாதேவ ஐயர் செயராம சர்மாஆஸ்திரேலியா ஆகியவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது
  1. 2017-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது - பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
  2. கபிலர் விருது - முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியனுக்கும்,
  3. உ.வே.சா விருது - ச.கிருஷ்ணமூர்த்திக்கும்,
  4. கம்பர் விருது - சுகி.சிவத்துக்கும்சொல்லின் செல்வர் விருது - முனைவர் வைகைச்செல்வனுக்கும்,
  5. ஜி.யு.போப் விருது - கோ.ராஜேஸ்வரி கோதண்டம்,
  6. உமறுப்புலவர் விருது - ஹாஜி எம்.முகமது யூசுபுக்கும்,
  7. இளங்கோவடிகள் விருது - முனைவர் வெ.நல்லதம்பிக்கும்,
  8. அம்மா இலக்கிய விருது - முனைவர் மீ.சு.ஸ்ரீலட்சுமி
  9. 2016-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது அல்டிமேட் மென்பொருள் தீர்வகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
2017-ம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்பாளர் விருதுகள்
  • நெல்லை சு.முத்துதி.வ.தெய்வசிகாமணிஆ.செல்வராசு (எ) குறிஞ்சிவேலன்முனைவர் ஆனைவாரி ஆனயதன்மறவன் புலவு க.சச்சிதானந்தன்வசயதா சியாமளம்முனைவர் இரா.கு.ஆல்துரைபேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன்ஆண்டாள் பிரியதர்ஷினிமுனைவர் தர்லோசன் சிங் பேடி ஆகிய பத்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
201ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது
  • தமிழ்த்தாய் விருது புவனேசுவரம் தமிழ்ச் சங்கத்துக்கும், கபிலர் விருது மி.காசுமானுக்கும், உ.வே.சா.விருது நடன காசிநாதனுக்கும், கம்பர் விருது க.முருகேசனுக்கும் அளிக்கப்படும். 
  • சிலம்பொலி செல்லப்பன்: சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமாருக்கும், ஜி.யு.போப் விருது கோ.சந்திரசேகரன் நாயருக்கும், உமறுப்புலவர் விருது நசீமா பானுவுக்கும், இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பனுக்கும், அம்மா இலக்கிய விருது உலகநாயகி பழனிக்கும், சிங்காரவேலர் விருது பா.வீரமணிக்கும் அளிக்கப்படும்.
  • கவிஞர் வைரமுத்து மகன்: முதலமைச்சர் கணினி தமிழ் விருது வை.மதன் கார்க்கிக்கு (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை) அளிக்கப்படும். இந்த விருதுகளில் தமிழ்த்தாய் விருது ரூ.5 லட்சத்துடன் பாராட்டுக் கேடயம், சான்றிதழ் அடங்கியதாகும். மற்ற விருதுகள் ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், பொன்னாடை மற்றும் தகுதியுரை அடங்கியதாகும்.
  • சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள்: கடந்த ஆண்டுக்கான (2018) சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, அரிமா மு.சீனிவாசன், குப்புசாமி, மருத்துவர் அக்பர் கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செந்தில்குமார் என்ற கிரிதாரிதாஸ், பழனி அரங்கசாமி, எஸ்.சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கும் அளிக்கப்பட உள்ளன. இந்த விருது ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியதாகும்.
  • 2018-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டின் ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசனுக்கும், மொழியியல் விருது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தத்துக்கும் அளிக்கப்படும். இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.1 லட்சம் விருதுத் தொகையும், தகுதியுரை, பொன்னாடை அளிக்கப்படும்.
  • தமிழ்ச் செம்மல் விருது: மாவட்டங்களில் தமிழ்ப் பணி ஆற்றி வருவோருக்காக 32 மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு விருதுகள் அளிக்கப்பட உள்ளன. அதன்படி, யு.எஸ்.எஸ்.ஆர்.கோ.நடராஜன் (சென்னை), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), இதயகீதம் ராமானுஜம் (காஞ்சிபுரம்), சிவராஜி (வேலூர்), கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி), சம்பந்தம் (திருவண்ணாமலை), செ.வ.மதிவாணன் (விழுப்புரம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர்), அ.ஆறுமுகம் (அரியலூர்), ஆ.கணபதி (சேலம்), பொ.பொன்னுரங்கன் (தருமபுரி), முனைவர் சி.தியாகராசன் (நாமக்கல்), வெ.திருமூர்த்தி (ஈரோடு), கவிமாமணி வெ.கருவைவேணு (கரூர்), முனைவர் மா.நடராசன் (கோவை), மு.தண்டபாணிசிவம் (திருப்பூர்), கோ.கந்தசாமி (நீலகிரி), வீ.கோவிந்தசாமி (திருச்சி), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோடை), முனைவர் சே.குமரப்பன் (சிவகங்கை), த.உடையார்கோயில் (தஞ்சாவூர்), நா.சக்திமைந்தன் (திருவாரூர்), மு.மணிமேகலை (நாகப்பட்டினம்), சுப்பையா (ராமநாதபுரம்), இலக்குமணசுவாமி (மதுரை), வதிலைபிரபா (திண்டுக்கல்), சு.குப்புசாமி (தேனி), க.அழகர் (விருதுநகர்), பே.ராஜேந்திரன் (திருநெல்வேலி), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி).
2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
  • 2019ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்த்தாய் விருதுடன் ரூ.5 லட்சம், நினைவுப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
  • கபிலர் விருது - புலவர் வெற்றி அழகன்
  • உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்
  • கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்
  • சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்
  • மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி
  • முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது - நாகராசன்
  • அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து
  • மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன்
  • இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச் செல்வன்(எ) திருஞானசம்பந்தம்
  • உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்
  • மொழியியல் விருது - இலங்கை முனைவர் சுபதினி ரமேஷ்
  • சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்
  • அயோத்திதாஸப் பண்டிதர் விருது - பிரபாகரன்
  • ஜி.யு. போப் விருது - மரிய ஜோசப் சேவியர்
2020-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
  • 2020-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளா்களின் பெயரைத் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.
  • அரசின் பரிசீலனைக்குப் பிறகு, குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கான விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சாா்பில் நடைபெறும் திருவள்ளுவா் திருநாள் விழாவில், விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.
  • திருவள்ளுவர் விருது 2020 - ந. நித்தியானந்த பாரதி
  • பேரறிஞர் அண்ணா விருது 2019 - முனைவர் கோ.சமரசம்
  • பெருந்தலைவர் காமராசர் விருது 2019 - முனைவர் மா.சு.மதிவாணன்
  • மகாகவி பாரதியார் விருது 2019 - முனைவர் ப.சிவராஜி
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது 2019 - த.தேனிசை செல்லப்பா
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது 2019 - முனைவர் சே.சுந்தரராசன்
  • முத்தமிழ்க் காவலர் மருத்துவர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - மணிமேகலை கண்ணன்
2021-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
  • பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
  • மகாகவி பாரதியார் விருது - பாரதிகிருஷ்ணகுமார் 
  • பாவேந்தர் பாரதி தாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன் 
  • சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
  • சிங்காரவேலர் விருது - மதுக்கூர் ராமலிங்கம் 
  • அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது - சஞ்சீவிராயர்
  • தேவநேயப்பாவாணர் விருது - அரசேந்திரன் 
  • உமறுப்புலவர் விருது - மம்மது 
  • கி.ஆ.பெ., விருது - ராஜேந்திரன் 
  • கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
  • ஜி.யு.போப் விருது - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் 
  • மறைமலையடிகள் விருது - சுகிசிவம் 
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது - அலாய்சியஸ் 
  • தமிழ்த்தாய் விருது - மலேஷிய தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழ்
  • இவ்வாண்டு முதல், விருது பெறுவோருக்கான பரிசுத் தொகை, 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 
  • அத்துடன், 1 சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.
திருவள்ளுவா் திருநாள் விருதுகள் (தமிழ் வளர்ச்சி விருதுகள்) 2022 & 2023 / THIRUVALLUVAR THIRUNAL AWARDS (TAMIL VALARCHI VIRUTHUKAL) 2022 & 2023
  • 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகள் வழங்குகிறார்.
  • விருது பெறுவோர்
  • திருவள்ளுவர் விருது - இரணியன் நா.கு.பொன்னுசாமி
  • பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா
  • பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
  • மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்
  • திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி
  • கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா
  • பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்
  • அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை
  • தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel