நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார் பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி
- நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷூலி (Achinta Sheuli). இது நடப்பு காமன்வெல்த்தில் இந்தியா வென்றுள்ள மூன்றாவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் மொத்தம் 313 கிலோ எடையை தூக்கியதன் மூலம் தங்க பதக்கத்தை தட்டி தூக்கியுள்ளார் அவர். ஸ்னாட்ச் முறையில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 170 கிலோவும் தூக்கியிருந்தார். மொத்தம் 313 கிலோகிராம். இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் அவர்.
- 20 வயதான அச்சிந்தா ஷூலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். 73 கிலோ எடைப் பிரிவில் அவர் விளையாடி வருகிறார்.
- காமன்வெல்த் போட்டியில் இதே எடைப்பிரிவில் அவர் பங்கேற்றார். இதற்கு முன்னர் 2021 ஜூனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை தங்கமும் வென்றுள்ளார்.
- இந்தியா இதுவரை வென்றுள்ள மூன்று தங்கப் பதக்கங்களும் பளுதூக்குதல் பிரிவில் கிடைத்தவை. முன்னதாக, மீராபாய் சானு மற்றும் ஜெரமி லால்ரினுங்கா ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர்.
டிஎன்பிஎல் கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக் - கோவை அணிகள்
- டிஎன்பிஎல் இறுதிப்போட்டி கோவையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது.
- 139 ரன்கள் இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை இருந்த காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே கோடாரி கருவியும் 2,000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
- உசிலம்பட்டி அருகே புத்துார் மலையடிவாரத்திலுள்ள அயன்மேட்டுப்பட்டியில், நிலத்தை சீர்படுத்திய போது, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் விவசாய பணிக்கு பயன்படுத்தும் இரும்பு கோடாரியும் இருந்தது.
- அக்காலத்தில் இப்பகுதி பாண்டிய நாடு - சேர நாட்டை இணைக்கும் வணிகப்பாதையாக இருந்துள்ளது.இரும்பால் செய்த போர் கருவியாக இல்லாமல், கோடாரி அமைப்புடன் கிடைத்திருப்பது விவசாயம் சார்ந்த பணிகள் நடந்துள்ளதற்கு ஆதாரமாக உள்ளது.
நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி கொடி பெற்று தமிழக போலீசுக்கு பெருமை
- ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு வழங்கப்படும், நாட்டின் மிக உயரிய, ஜனாதிபதியின் கவுரவ கொடியை பெற்றதன் வாயிலாக, தமிழக காவல் துறைக்கு பெருமை கிடைத்துள்ளது.
- சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதி கொடியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக போலீசாருக்கு வழங்கி பெருமை சேர்த்தார். நாட்டில் சிறந்த படைக்கான கவுரவமும் பெற்று, தமிழக போலீஸ் சாதனை படைத்துள்ளது.
- பாதுகாப்பு படைகள் மற்றும் போலீசில் திறம்பட பணியாற்றுவோருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும். அதேபோல, ராணுவம் மற்றும் போலீஸ் படையினரை கவுரவிக்கும் வகையில், ஜனாதிபதியின் கவுரவக் கொடி வழங்கப்படுகிறது.
டெல்லி காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்
- 2017-ஆம் ஆண்டு சஞ்சய் அரோரா மத்திய அரசுப் பணிக்குச் சென்றார். அங்கு மத்திய ரிசர்வ் படையின் இயக்குநராக இருந்து, தற்போது இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை இயக்குநராகவும், சீனா, பூட்டான், மற்றும் அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும், எஸ்எஸ்பி எனும் நுண்ணறிவு பிரிவு இயக்குநராகவும் கூடுதலாகப் பொறுப்பாக வகித்து வந்தார்.
- இந்நிலையில், அவரை டெல்லி காவல் துறையின் காவல் ஆணையராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல் துறை உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா அயல் பணியில் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம்
- சர்வதேச அளவில் 72 நாடுகள் கலந்து கொள்ளும் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
- காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளிக் குவித்தது.
- இந்நிலையில் நேற்று நடைபெற்ற பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் 19 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- மிசோரமைச் சேர்ந்த இவர், 300 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கியுள்ளார். இவர் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
அல் நஜா-IV என்ற இந்தியா, ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கும் ஓமான் நாட்டு வீரர்கள் இந்தியா வருகை
- இந்திய ராணுவம் மற்றும் ஓமான் ராணுவம் இடையேயான அல் நஜா-IV என்ற இந்தியா ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியின் நான்காவது பதிப்பு ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தானில் நடைபெற உள்ளது.
- இதில் கலந்து கொள்வதற்காக ஓமான் ராணுவத்தின் பாராசூட் படையைச் சேர்ந்த 60 வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். 18 இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையைச் சேர்ந்த வீரர்கள் குழு இந்திய ராணுவத்தின் சார்பாக இதில் கலந்து கொள்ளும்.
- தீவிரவாத எதிர்தாக்குதல் நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளுடன் உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகளிலும் கூட்டுப் பயிற்சி கவனம் செலுத்தும்.
- இந்தியா மற்றும் ஓமான் நாட்டு ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த நிலைக்கு மேம்படுத்துவதையும், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது.