ட்விட்டர் வாங்கும் முடிவை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
- டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க்.
- இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார்.
- இந்த நிலையில் ட்விட்டரில் 20 முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால், 5 சதவீதத்திற்கு குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
- இதற்கிடையே, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி ட்விட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.
- இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார். போலி கணக்குகள் கேட்ட தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ஜூலை 13-ல் ராஜிநாமா
- இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
- மக்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சமடைந்துள்ளார்.
- இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை அவைத் தலைவா் கூட்டினாா். அதில் பங்கேற்ற எம்.பி.க்கள், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினா். இதையடுத்து, அதிபா் கோத்தபயவுக்கு அவைத் தலைவா் எழுதிய கடிதத்தில், அதிபா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
- இதைத் தொடா்ந்து, ஜூலை 13-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபா் கோத்தபய கூறியுள்ளாா் என அவைத் தலைவா் தெரிவித்தாா்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரைபாகினா சாம்பியன்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
- இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (27 வயது, 2வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (23 வயது, 23வது ரேங்க்) 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.
- இப்போட்டி 1 மணி, 48 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கிராண்ட் ஸ்லாம்தொடரில் பட்டம் வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமை ரைபாகினாவுக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு
- இலங்கையில் கோத்தபய - ரணில் சிக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி மக்கள் மீண்டும் போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
- இதற்கிடையே நேற்றிரவு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு திடீரென வாபஸ் பெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது.
- இதனிடையே நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர், அதிபர் பதவி விலக பல்வேறு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
- இதன் அடிப்படையில்; இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். தற்போதைய அரசு தொடரவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பதவி விலகினார்.
- அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அரசு அமைய வழிவிட்டு ராஜினாமா முடிவு எடுத்ததாக டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
- மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் வரும் 12 ஆம் தேதி புது தில்லியில் விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஐகானிக் வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்த 6வது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
- டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
- சுரங்கம், நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே, சுரங்கத் துறை செயலர் திரு அலோக் டாண்டன் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் மத்திய சுரங்கம், நிலக்கரித்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இந்த ஒரு நாள் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
- சுரங்கத் துறையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு தேசிய அளவிலான விருது, 5-ஸ்டார் தரமதிப்பீடு செய்யப்பட்ட சுரங்கங்களுக்கான விருதுகள், 2020-21 மற்றும் தேசிய புவி அறிவியல் விருதுகள்-2019 ஆகியவை மாநாட்டின் சில சிறப்பம்சங்களாக இருக்கும்..
- தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் தொழில்நுட்ப அமர்வு, சுரங்கத்தில் ஆட்டோமேஷன் குறித்த அமர்வு ஆகியவை மாநாட்டின் தொடக்க அமர்வின் ஒரு பகுதியாக நடைபெறும்.
- பல்வேறு சுரங்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்கும் வட்ட மேசை விவாதங்களின் போது இந்தியாவின் சுரங்கத் துறை தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறும்.