Type Here to Get Search Results !

TNPSC 6th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இளையராஜா, பி.டி. உஷா தேர்வு

 • கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்கள். 
 • அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் விஜயேந்திர பிரசாத், கொடையாளரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோரை நியமன எம்.பி.க்களாக நியமித்து மத்திய அரசு நேற்று அறிவித்தது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதல் பொறுப்பு

 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இருவரின் பங்களிப்பு குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
 • இந்நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வியின் சிறுபான்மையினர் நலத்துறை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இதேபோல், ஆர்சிபி சிங் வகித்து வந்த இரும்பு துறை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரி தொழில்நுட்ப கல்வி ஒப்பந்தங்கள் கையெழுத்து

 • உயிரி தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், 'டைசல்' நிறுவனத்திற்கும் இடையே, ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், 'டைடல்' பூங்காவுடன் இணைந்து, டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்கா அமைத்துள்ளது. இங்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையும் இணைந்து, உயிரி தொழில்நுட்ப முதன்மை கருவியாக்க மையத்தை அமைத்து உள்ளது.
 • இந்த மையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி, உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • இதற்காக, சென்னையில் உள்ள பல தனியார் நிறுவனங்களுடன், டைசல் நிறுவனம் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
 • 'சிப்காட்' நிறுவனம் சார்பில், 35 கோடி ரூபாய் செலவில், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் மூன்று கருத்தரங்கு கூடங்கள், இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வசதிகளுடன், ஏற்றுமதி வணிக வசதிகள் மையமும், 1.56 கோடி ரூபாயில் தீயணைப்பு நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளன.
 • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெருப்பெரிச்சல் கிராமத்தில், 10.19 கோடி ரூபாய் செலவில் ஆண்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.
 • காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், 1.32 கோடி ரூபாய் செலவில் தீயணைப்பு நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.
ஆக்ராதூத் குழும செய்தித்தாள்களின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
 • ஆக்ராதூத்  குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 
 • ஆக்ராதூத்தின் பொன்விழா கொண்டாட்டக் குழுவின் தலைமை புரவலரான அஸ்ஸாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சோடியம் அயன் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களை வேகமாக சார்ஜ் செய்யும் மின்-சுழற்சி உருவாக்கம்
 • சோடியம்-அயன் அடிப்படையிலான பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களை உருவாக்க விஞ்ஞானிகள் நானோ பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். 
 • அவை விரைவாக சார்ஜ் செய்யப்படுவதுடன், மின் சுழற்சிகளை ஒருங்கிணைக்கக் கூடியவையாகும். சோடியம் அயன் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் விலை மலிவானவை என்பதுடன், மின் சுழற்சிகளின் செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • சோடியம்-அயன் பேட்டரிகள் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக  பயன்படுத்தப்படலாம். இயற்கையில் சோடியம் மிகுதியாக்கிடைக்ககூடியது என்பதால், வணிகரீதியில் அதனைப் பயன்படுத்துவதன் மூலம் செலவு வெகுவாகக்குறையும் என மதிப்பிடப்படுகிறது.
 • கரக்பூரில் உள்ள ஐஐடியின்  இயற்பியல் துறைப் பேராசிரியர் டாக்டர். அம்ரீஷ் சந்திரா, சோடியம் அயன்  அடிப்படையிலான ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சி செய்து வருகிறார். 
 • மேலும் அவரது குழு அதிக எண்ணிக்கையிலான நானோ பொருட்களை உருவாக்கியுள்ளது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) தொழில்நுட்ப மிஷன் பிரிவின் (டிஎம்டி) ஆதரவுடன் சோடியம் அயன் அடிப்படையிலான பேட்டரிகள் மற்றும் சூப்பர் கெபாசிட்டர்களைப் பெறுவதற்காக சோடியம் இரும்பு பாஸ்பேட் மற்றும் சோடியம் மாங்கனீசு பாஸ்பேட்களை குழு பயன்படுத்தியது. இந்த சோடியம் பொருட்கள் ஒரு பேட்டரியை உருவாக்க கார்பனின் பல்வேறு புதிய கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டன.
 • இந்த சோடியம் பொருட்கள் லித்தியம் அடிப்படையிலான பொருட்களை விட மலிவானவை, அதிக செயல்திறன் கொண்டவையாகும். மேலும் விரைவாக சார்ஜ் செய்யக்கூடியவையாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel