Type Here to Get Search Results !

TNPSC 26th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

28000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்கும் இந்தியா

  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (Defense Acquisition Council) கூட்டத்தில் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • ஆயுதப்படைகளுக்கு ரூ.28 ஆயிரத்து 732 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் ஸ்வர்ம் ட்ரோன்கள் மற்றும் க்ளோஸ் கால் கார்பைன்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பிற ஆயுதங்களும் அடங்கும். இந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும்.
  • மொத்தம் ரூ.28732 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மட்டுமின்றி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மிகவும் தேவையான 4 லட்சம் கார்பைன்களும் ராணுவத்துக்கு வாங்கப்படும். இதுதவிர புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளுக்கான 14 விரைவு ரோந்து படகுகள், கடலோர காவல்படை ஆகியவையும் வாங்கப்படும்.
  • இந்திய கடற்படையின் பலத்தை வலுப்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடற்படைக்கு 1,250-கிலோவாட் திறன் கொண்ட மேம்பட்ட கடல் எரிவாயு டர்பைன் ஜெனரேட்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த ஜெனரேட்டர்கள் இந்திய கடற்படையின் கொல்கத்தா கிளாஸ் கப்பல்களில் நிறுவப்படும். இதன் மூலம் கடலில் செயல்படும் போதும் எளிதாக மின்சாரம் தயாரிக்க முடியும்.

தமிழக காவல்துறையில் புதிய சீருடை 'லோகோ' அறிமுகம் - காவலர் முதல் டிஜிபி வரை ஒரே அடையாளம்

  • தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொருவருக்கும், அவரவர் அதிகாரம், அடிப்படைத் தகுதிகளுக்கு ஏற்ப சீருடை அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.
  • அதன்படி, டிஜிபியின் தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம், காலரில் ரிப்பன் இருக்கும்.
  • கூடுதல் டிஜிபியின் சீருடையில், தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் இருக்கும்.
  • இதேபோல, காவல் ஆய்வாளர்கள் சீருடையின் தோள்பட்டையில் டி.பி. (தமிழ்நாடு போலீஸ்), கயிறு, 3 ஸ்டார் இருக்கும். உதவி ஆய்வாளர்களுக்கு இரண்டு ஸ்டார், தலைமைக் காவலருக்கு 3 பட்டைகள் இருக்கும். இவ்வாறு, காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் முதல் டிஜிபி வரை, அனைத்துப் பிரிவு போலீஸாரின் நிலையைக் குறிக்கும் வகையில், சீருடை லோகோ அமைந்திருக்கும்.
  • எனினும், ஒட்டுமொத்தமாக தமிழக காவல் துறை என்பதைக் குறிக்கும் வகையில், தமிழக போலீஸாரின் சீருடையில் எந்த அடையாளமும் இல்லை.
  • எனவே, வட மாநிலங்களில் இருப்பதுபோல, மாநிலப் பெயரைக் குறிக்கும் வகையில், காவலர் சீருடையில் ஒரே மாதிரியான அடையாளம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
  • இதற்கு உரிய தீர்வுகாணும் வகையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழக காவல் துறையில் முதல்முறையாக காவலர் முதல் டிஜிபி வரை அனைவரது சீருடையிலும் ஒரே மாதிரியான அடையாள 'லோகோ' இடம் பெற உள்ளது.
  • அதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசியக் கொடி உள்ளிட்டவற்றுடன், 'தமிழ்நாடு காவல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடுதலாக இந்த லோகோவும் இடம்பெறும்.
  • அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த லோகோ, தமிழக போலீஸார் அனைவரின் சீருடையின் இடது கை பகுதியில் ஜொலிக்க உள்ளது.
  • இந்த லோகோ வடிவமைப்பை, தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் செய்துள்ளார். ஏறத்தாழ 100 லோகோ-க்களுக்கு மேல் தயாரித்து, அவற்றை கூர்ந்து ஆராய்ந்து, அவற்றில் ஒன்றை தேர்வு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையம்
  • குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்திய பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையத்தை அமைக்க, ஆயுஷ் அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் முதல் உலக மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • உலக மருத்துவ மையத்தை அமைப்பதற்கான பூமி பூஜை ஜாம் நகரில் நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்து கொண்டார். இந்த மையத்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவ மையத்தின் அனைத்து செலவுகளும் ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. 
  • உலக சுகாதார அமைப்புக்கு தேவையான போதிய அலுவலக வளாகங்கள் போன்ற வசதிகளை மத்திய அரசு அளிக்கும்.   இந்த உலக சுகாதார பாரம்பரிய மருத்துவ மையம் உலகில் உள்ள அனைத்து பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆதரவை வழங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel