Type Here to Get Search Results !

TNPSC 23rd JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு

  • தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
  • இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன," என்று கூறினார். இந்த பாதிப்பால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • உலக அளவில் தற்போது இதுபோன்ற இரண்டு சுகாதார அவசரநிலைகள் மட்டுமே அமலில் உள்ளன - முதலாவதாக கொரோனா வைரஸும், இரண்டாவதாக போலியோ மற்றும் அதை ஒழிப்பதற்கான முழு முயற்சியும் உள்ளன.
  • குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டுமா என்பதில் அவசர குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்று கூறிய அவர், எவ்வாறாயினும் இந்த பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் இது உண்மையில் சர்வதேச கவலைக்குரியது என்ற முடிவுக்கு தாம் வந்துள்ளதாகவும் டெட்ரோஸ் தெரிவித்தார்

வடக்குபட்டு பகுதியில் பழங்கால கட்டிட சுவர் பயன்பாட்டு பொருட்கள் கண்டெடுப்பு

  • ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஒரகடம் அடுத்த வடக்குபட்டு கிராமப் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • மேலும் அதனை சுற்றி பள்ளம் தோன்டிய போது பழங்கால கல்மணி, கண்ணாடி மணி, எலும்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
  • எந்த ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது, அவர்களின் கலாச்சாரம் குறித்து ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க வீராங்கனை உலக சாதனை

  • ஓரிகானில் மகளிர் பிரிவில் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி நடந்தது. 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான சிட்னி மெக்லாலின் இந்த தூரத்தை 50.65 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். 
  • முன்னதாக, அமெரிக்க டிராக் அண்ட் பீல் சாம்பியன்ஷிப்பில் இவர் 51.41 வினாடிகளை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. 
  • தனது சாதனையை தானே முறியடித்த பெருமை பெற்றார் மெக்லாலின். நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை பெம்கே போல் 52.27 வினாடிகளில் கடந்து வெள்ளி, மற்றொரு அமெரிக்க வீராங்கனை தலிலா முகம்மது 53.13 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய விருதுகள்
  • மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக,  14.07.2022 அன்று, மத்திய அரசின் விருதுகளுக்கான இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  
  • இந்த இணையப் பக்கத்தில் 15 ஜுலை 2022 முதல் 28ஆகஸ்ட் 2022 வரை விண்ணப்பிக்கலாம்.  இந்த விளம்பரத்தை,  மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின், www.disabilityaffairs.gov.in என்ற வலைப்பக்கத்திலும் (website) பார்க்கலாம்.   
  • மேற்குறிப்பிட்ட விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை அனுப்புவது குறித்து விரிவாக விளம்பரப்படுத்தக்கோரி,  மாநில/யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கு 19.7.2022 அன்று கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel