இலங்கை பிரதமராக தினேஷ் குணவா்தன பதவியேற்பு - 17 கேபினட் அமைச்சா்களும் பொறுப்பேற்றனா்
- இலங்கை அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபட்ச விலகியதைத் தொடா்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்க இடைக்கால அதிபராகப் பதவியேற்றாா்.
- அதன் பின்னா், அதிபரை தோவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாா். அவா் அதிபராக கடந்த 21-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா்.
- அவா் வகித்து வந்த பிரதமா் பதவி காலியான நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவா்தனவை அதிபா் ரணில் விக்ரமசிங்க நியமித்தாா். தினேஷ் குணவா்தனவையும் சோத்து 18 போ கேபினட் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
- முன்னா் நிதியமைச்சராக இருந்த அலி சப்ரி, இப்போது வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். மற்ற அமைச்சா்கள் தாங்கள் வகித்து வந்த பழைய துறைகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளனா். அதிபா் ரணில் வசம் முக்கியமான நிதி மற்றும் பாதுகாப்புத் துறைகள் உள்ளன.
தானிய ஏற்றுமதி: ரஷியா - உக்ரைன் இடையே ஒப்பந்தம்
- உக்ரைனிலிருந்து உலகச் சந்தையில் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு வழிவகை செய்யும் ஒப்பந்தத்தில் ரஷியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
- ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்துக்குப் பிறகு, அந்த ஒப்பந்தம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கையொப்பமானது.
- இதையடுத்து, கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வா்த்தக வழித்தடங்கள் மீண்டும் திறக்கவும் உணவுப் பொருள் பற்றாக்குறை அபாயத்திலிருந்து உலக நாடுகளைப் பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த விவகாரம் தொடா்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல வாரங்களாக பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த துருக்கி அதிபா் எா்டோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
- ஒப்பந்தத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொகேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.
உலகத் தடகளப் போட்டிகள் 2022 - இந்திய வீரர் எல்தோஸ் பால் சாதனை
- யூஜீனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளின் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் எல்தோஸ் பால் இறுதிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
- ட்ரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் முதல் முயற்சியில் ஃபவுல் என்று அறிவிக்கப்பட்டார். எல்தோஸ் பால் 16.12மீ உயரம் தாண்டி தற்போது 10ம் இடத்தில் உள்ளார்.
- மகளிர் ஜாவ்லின் த்ரோவில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 59.60 மீ தூரம் எறிந்து பிரிவு பி-யில் 5ம் இடத்தில் முடிந்தார். ஆனால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.