TNPSC குரூப் 1 தேர்வு 2022 அறிவிப்பாணை வெளியீடு / TNPSC GROUP 1 EXAM 2022 NOTIFICATION RELEASED
TNPSCSHOUTERSJuly 21, 2022
0
அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டி தேர்வு குறித்து அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியீட்டுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.