TAMIL
- புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் புதுமையை பயன்படுத்துதல் தொடர்பாக, நிடி ஆயோக் அமைப்பு பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்தப் பட்டியல், அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பரமேஸ்வரன் அய்யர் தலைமையில் துணைத் தலைவர் சுமன் பெர்ரி வெளியிட்டார்.
- கடந்த 2019 மற்றும் 2021ல், 36 காரணிகளின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசை வெளியிடப்பட்டது.
- தற்போது, சர்வதேச அளவிலான, 66 சிறப்பு காரணிகள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
- 17 பெரிய மாநிலங்கள், 10 வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் மற்றும் ஒன்பது யூனியன் பிரதேசங்கள் என, மூன்றாக பிரித்து ஆராயப்பட்டது.
- இந்தப் பட்டியலில் கர்நாடகா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கானா, ஹரியானா ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
- பெரிய மாநிலங்கள் பிரிவில், சத்தீஸ்கர், ஒடிசா, பீஹார் ஆகியவை கடைசி இடங்களைப் பிடித்து உள்ளன.யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில், மணிப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
- NITI Aayog publishes a list of organizations on innovation and application of innovation in public administration. Now the third list has been published. The list was released under the chairmanship of the organization's Chief Executive Officer Parameswaran Iyer and Vice President Suman Perry.
- Last year in 2019 and 2021, states were ranked based on 36 factors. Currently, the list is prepared on the basis of 66 special factors of international level. All the states and union territories are divided into three categories.
- 17 major states, 10 North-Eastern and Hill States and nine Union Territories, divided into three are examined. Karnataka has topped the list for the third time in a row. Telangana and Haryana are ranked second and third.
- In the category of large states, Chhattisgarh, Odisha and Bihar occupy the last positions. Among the Union Territories, Chandigarh is at the top. In the Northeast and Hill States category, Manipur has topped the list.