TAMIL
- சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது.
- அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நாசா.
- சூரியனில் இருந்து வெளியாகும் துகள்கள் பூமியை நெருங்கும்போது செயற்கைக்கோள்களின் மின்னணு பாகங்கள் பாதிக்கப்படும். இதனால் ரேடியோ, ஜிபிஎஸ் போன்ற சிக்னல்கள் கிடைப்பது சற்று பாதிக்கும்.
- பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனில் அடர்த்தியான புள்ளிகள் தென்படும். அவை 'சன் ஸ்பாட்ஸ்' எனப்படுகின்றன.
- இந்த சூரியப் புள்ளிகள் அல்லது சூரியப் பொட்டுகள் அருகே இருக்கும் காந்தப் புலக் கோடுகள் ஒன்றை ஒன்று கடக்கும்போதோ, அவற்றின் அமைவிடம் மறுசீரமையும்போதோ சூரியக் துகள்கள் வெளிப்படும் சூரிய கிளர்ச்சி வெடிப்புச் சம்பவங்கள் நிகழும் என்கிறது நாசா.
- நமது சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் இந்த சூரிய கிளர்ச்சி நிகழ்வுகள்தான். சூரிய கிளர்ச்சியிலிருந்து வெளியாகும் ஆற்றல் மிக்க துகள்கள் மற்றும் கதிர்வீச்சு பூமியில் உள்ள உயிரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை. ஆனால், நாம் கவலைப்பட வேண்டாம். புவியின் காந்தப் புலம் மற்றும் வளி மண்டலம் ஆகியவை அவற்றைத் தடுத்து நமக்கு பாதுகாப்பளிக்கும்.
- சூரியனில் நடக்கும் அதிதீவிர காந்தப்புல மாறுபாடுகளின் விளைவாகவே இந்த சூரியக் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நிகழ்பவை கிடையாது. சூரியனிலிருந்து வெளிவரும் பிளாஸ்மா உமிழ்வுகளுடன் இணைந்து, எப்போது வேண்டுமானாலும் தன்னிச்சையாக நடைபெறக்கூடியவை.
- இந்த நிகழ்வுகள் சூரியனில் நடக்கும்போது, காந்தப்புல வடிவில் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்புகளும் உண்டு. ஒன்று கயிறு போன்றது மற்றொன்று கூண்டு போன்றது. எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமானால், கயிறு போன்ற அமைப்புகளால் உருவான கூண்டுகள், அதற்குள் அடுத்தடுத்த கூண்டுகள் என இந்த கட்டுப்பாட்டு முறை அமைந்திருக்கும்.
- கடந்த 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 24ஆம் தேதி சில மணி நேரங்களில் உருவான சூரியக்கிளர்ச்சியை ஆய்வாலர்கள்கூர்ந்து கவனித்தனர். இந்த கிளர்ச்சி சூரியனின் கொரோனாப்பகுதியிலிருந்து (வெளிப்புற அடுக்கு) வரும் தீப்பொறியுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
- அதாவது கொரோனாப்பகுதியின் சூரியனின் மேற்பரப்பை விட சூடான பகுதி. இதன் அதீத வெப்பத்துக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. இந்த வெப்பத்தின் காரணமாக இங்கிருக்கும் காந்தப்புலம் குறித்து ஆய்வு செய்ய முடிவதில்லை.
- ஆனால், கொரோனாப்பகுதிக்கு 1690 கி.மீட்டர்கள் மேலே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தினர்.
- நாசாவின் சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு விண்கலத்தின் தரவுகள் மூலம், சூப்பர் கம்ப்யூட்டர்களில் சில மெய்நிகர் மாதிரிகளையும் உருவாக்கினர் ஆராய்ச்சியாளர்கள். அதிலிருந்து, கூண்டுகளை உடைக்கும் அளவுக்கும் கயிறுகளுக்கு திறன் போதவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.
- ஒன்றொடொன்று இறுக்கி சுற்றப்பட்டுள்ள கயிறுகள், மொத்தமாக ஆற்றலை வெளிப்படுத்தும்போது ஒரு பெருவெடிப்பு போன்ற சூரியக்கிளர்ச்சி நடைபெறுகிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.
- From time to time, fiery lava is emitted into the sky from the Sun. This is called coronal mass ejection. The plume spews solar material into the sky. NASA says it will take 3 to 5 days for the particles to reach Earth.
- As particles from the Sun approach the Earth, the electronic components of satellites are affected. This will slightly affect the availability of signals such as radio and GPS. When viewed from Earth, sunspots are visible. They are called 'sun spots'.
- When the magnetic field lines near these sunspots, or sunspots, cross each other and rearrange their positions, solar flares, which eject solar particles, occur, according to NASA.
- These solar flare events are the largest explosive event in our solar system. Energetic particles and radiation released from solar flares can cause severe damage to life on Earth. But, let's not worry. Earth's magnetic field and troposphere block them and protect us.
- These solar flares occur as a result of extreme magnetic field variations on the Sun. These do not occur at regular intervals. Coupled with plasma emissions from the Sun, they can occur spontaneously at any time.
- As these events take place in the Sun, there are systems that can control it in the form of a magnetic field. One is like a rope and the other is like a cage. To put it simply, this control system consists of cages formed by rope-like structures, with subsequent cages within them.
- Last year, on October 24, 2014, researchers closely observed the solar flare that formed within a few hours. This agitation is associated with a flare from the Sun's corona (outer layer).
- That is, the coronal region is hotter than the surface of the Sun. The cause of this extreme heat is not yet clear. Because of this heat, the magnetic field here cannot be studied. But they used data from the Sun's surface to determine what was happening 1,690 km above the corona.
- The researchers also created some virtual models on supercomputers using data from NASA's Solar Dynamics Observatory spacecraft. From there, they found that the ropes were not strong enough to break the cages.
- They also found that when the strings are wrapped tightly around each other, the collective release of energy results in a solar flare, like a big bang.