அமெரிக்க தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் அற்புத புகைப்படம்
- ஐரோப்பா, கனடா விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து 'ஜேம்ஸ் வெப்' என்ற விண்வெளி தொலைநோக்கியை ரூ.79.6 ஆயிரம் கோடியில் நாசா உருவாக்கியுள்ளது.
- உலகின் மிகப் பெரிய இந்த தொலைநோக்கி, தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப்படத்தை அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் வெளியிட்டார். இதற்குமுன் இப்படிப்படம் எடுக்கப்பட்டது இல்லை.
- இதில், 'பிரபஞ்சம் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிகப்பு நிறங்களில் புள்ளிகள், கோடுகள், சுருள்கள், சூழல்கள் என வண்ணமயமாக காட்சி அளிக்கிறது,' என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறியுள்ளார்.
அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் முகமது ஷமி சாதனை
- அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.
- இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 31 வயதான ஷமி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் ஷமி.
- ஸ்டோக்ஸ், பட்லர் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டை ஷமி வீழ்த்தி இருந்தார். இதில் அவர் பட்லர் விக்கெட்டை வீழ்த்திய போது தான் இந்திய அணி பவுலர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் வீசிய 4071-வது பந்தில் 150-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதே போட்டியில் தனது 151-வது விக்கெட்டை கைப்பற்றியும் அசத்தினார்.
- இதன் மூலம் இதுநாள் வரை அஜித் அகர்கர் வசம் இருந்த இந்த சாதனை இப்போது ஷமி வசம் ஆகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள்.
கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு உதவும் தியோகர் விமான நிலையம் திறந்து வைத்தார் மோடி
- ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தியோகரில் 12 கிமீ தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனத்தில் ஊர்வலமாக சென்ற அவர், 657 ஏக்கர் பரப்பளவில் ரூ.401 கோடி மதிப்பில் கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர், ரூ.16,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- விழாவில் மோடி பேசுகையில், ''தியோகர் புதிய விமான நிலையத்தின் மூலமாக ஜார்கண்டில் சுற்றுலாத்துறை மேம்படும். இதன் மூலம், புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த விமான நிலையம், கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
- பொகாரோ -அங்குல் எரிவாயு குழாய் திட்டம் மூலம் 11 மாவட்டங்கள் பயன்பெறும். புதிய திட்டங்கள் மூலமாக பீகார், மேற்கு வங்க மக்களும் பயன் பெறுவார்கள். ரயில்வே, சாலை மற்றும் விமானப்பாதைகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கடந்த 8 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றார்.
தேசிய குத்துச்சண்டை - தமிழகத்துக்கு இரு வெண்கலம்
- காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவருக்கான லைட் மிடில் வெயிட் (67-71 கிலோ) பிரிவில் தமிழகத்தின் ஜி.கபிலனும், மகளிருக்கான லைட் வெயிட் (57-60 கிலோ) பிரிவில் தமிழகத்தின் ஆா்.மாலதியும் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
- இந்தப் போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் அணி 9 தங்கம், 2 வெள்ளி என 11 பதக்கங்களுடனும், மகளிா் பிரிவில் ஹரியாணா அணி 8 தங்கம், 3 வெள்ளி என 11 பதக்கங்களுடனும் போட்டியின் சிறந்த அணிகளாகத் தோவாகின.
- ஆடவா் பிரிவில் 2, 3-ஆம் இடங்களை முறையே ஹரியாணா, மத்திய பிரதேசம் அணிகள் பிடிக்க, மகளிா் பிரிவில் மகாராஷ்டிர அணி 2-ஆம் இடமும், தில்லி அணி 3-ஆம் இடமும் பெற்றன.