TNPSC 5th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஹாக்கி 5 - போலந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

 • 5 அணிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றி ஒரு ட்ராவுடன் பைனலுக்கு வந்த இந்திய அணி வெற்றியின் மூலம் இந்தத் தொடரில் தோல்வியடையாத அணியாக சாம்பியன் ஆனது.
 • இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி பிறகு பாகிஸ்தானுடன் மீண்டும் டிரா செய்தது. 3வது போட்டியில் மலேசியாவை 7-3 என்ற கோல் மழையில் அபார வெற்றி பெற்றது இந்தியா. பிறகு போலந்தை 6-2 என்று வென்றது.
 • பிறகு இறுதிப் போட்டியில் போலந்தை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
 • பெண்கள் பிரிவில் ஹாக்கி 5 தொடரில் இந்தியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, போலந்து அணிகள் பங்கேற்றன. உருகுவே, போலந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி கண்டது. 
 • பிறகு சுவிட்சர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தென் ஆப்பிரிக்காவுடன் 4-4 என்று ட்ரா செய்தது. ஆனால் இந்திய மகளிர் அணி 4ம் இடமே பிடிக்க முடிந்தது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (லைப்) என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
 • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை' (லைப்) என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
 • மோடி பேசுகையில், 'மழை நீர் சேமிப்பு போன்ற பிரசாரங்கள் மூலம் நாட்டு மக்களை நீர் பாதுகாப்புடன் இணைத்து வருகிறோம். தற்போது நாட்டில் 13 பெரிய நதிகளை பாதுகாக்கும் பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது. 
 • இதில், நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், ஆறுகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், கடந்த 8 ஆண்டுகளில் 7,400 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது, வனவிலங்குகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்க வழிவகுத்துள்ளது,' என்றும் கூறினார்.
 • உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4 டன்னாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே. இதன் மூலம், 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை எட்ட தீர்மானித்துள்ளோம் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
 • அரசு திட்டமிட்டதை விட 5 மாதங்களுக்கு முன்னதாக, பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை இந்தியா எட்டி இருக்கிறது. கடந்த 2014ல் எத்தனால் கலப்பு 1.5 சதவீதமாக இருந்தது. 10 சதவீத எத்தனால் கலப்பு, 27 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வழிவகுத்துள்ளது. 
 • மேலும், ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தியுள்ளது. அதோடு, எத்தனால் கலப்படம் அதிகரிப்பதால், கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகள் ரூ.40,600 கோடி வருவாய் ஈட்டி உள்ளனர். 
 • இந்த சாதனைக்காக நாட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.இதே போல், மின் உற்பத்தித் திறனில் 40% புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து மின் உற்பத்தி செய்வதற்கான இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்துள்ளது. 
பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரோஜர் - அரிவலோ சாம்பியன்
 • பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ - ஜீன் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
 • பைனலில் குரோஷியாவின் ஐவன் டோடிக் - ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியுடன் மோதிய ரோஜர் - அரிவலோ இணை 6-7 (4-7), 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி கோப்பையை கைப்பற்றியது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் கார்சியா-கிறிஸ்டினா சாம்பியன்
 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் உள்ளூர் நட்சத்திரங்கள் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா மிளாடெனோவிச் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
 • இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் - ஜெஸ்ஸிகா பெகுலா ஜோடியுடன் நேற்று மோதிய பிரான்ஸ் ஜோடி 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 1 மணி, 44 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டது. 
பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் பிரிவில் 14வது முறையாக நடால் சாம்பியன்
 • பிரெஞ்ச் ஓபனில் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (23வயது, 8வது ரேங்க்) உடன் நேற்று மோதிய நடால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். 
 • அவரது அனுபவ ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ரூட் எதிர்ப்பின்றி சரணடைய... நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று, பிரெஞ்ச் ஓபனில் 14வது முறையாக கோப்பையை முத்தமிட்டார். 
 • இந்த போட்டி 2 மணி, 18 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக களிமண் தரை மைதானங்களில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் 'கிங் ஆப் கிளே' நடால்.
 • அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர்கள் வரிசையில் பெடரர், ஜோகோவிச் தலா 20 பட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், நடால் தனது 22வது பட்டத்தை கைப்பற்றி முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளார். 
மகரில் சந்த் கபீருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை, சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தைத் திறந்துவைப்பு
 • குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், உத்தரப் பிரதேசத்தின் மகரில் உள்ள கபீர் சௌரா தாமில் சந்த் கபீருக்கு மரியாதை செலுத்தியதுடன் சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
 •  சந்த் கபீரின் முழு வாழ்க்கை, மனித இனத்தின் சிறந்த உதாரணம் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். துறவிகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து சமூக அவலங்களை நீக்கி வருவது இந்தியாவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறிய குடியரசுத் தலைவர், சமூகத்தால் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட துறவிகளுள் சந்த் கபீரும் ஒருவர் என்று தெரிவித்தார்.

0 Comments