ஐநா.வுக்கான நிரந்தர தூதராக ருச்சிரா காம்போஜ் நியமனம்
- ஐநா.வுக்கான இந்திய தூதராக பணியாற்றி சையத் அக்பருதீன் ஓய்வு பெற்ற பிறகு, ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதராக டிஎஸ்.திருமூர்த்தி கடந்த 2020 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார்.
- இவர் தற்போது ஓய்வு பெறுவதால், 1987ம் ஆண்டில் ஐஎப்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ருச்சிரா காம்போஜ் ஐநா.வுக்கான நிரந்தர தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- இவர் தற்போது பூடான் நாட்டில் இந்திய தூதராக பணியாற்றி வருகிறார். ஐநா.வுக்கான நிரந்தர தூதர் பணியை ருச்சிரா காம்போஜ் விரைவில் தொடங்குவார் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நாட்டில் ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்தும் 36 வது மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதுடன், உணவு பாதுகாப்பை நாடு முழுவதும் மாற்றிக்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.
- கொவிட் -19 பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மலிவு விலை உணவு தானியங்களை பயனாளிகளுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதில், ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை முக்கிய பங்காற்றியுள்ளது.
- நாட்டில் செயல்படுத்தப்படும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் ஒன்றான இத்திட்டம், 80 கோடி பயனாளிகளுக்கும் பயனளிக்கும் விதமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் 2019-ல் இருந்து குறுகிய காலத்திற்குள் செயல்படுத்தப்பட்டது.
- இத்திட்டம் செயல்படுத்த தொடங்கியதிலிருந்து 71 கோடி புலம்பெயர்ந்த பரிவர்த்தனைகள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 43.6 கோடி மற்றும் பிரதமரின் கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின்கீழ் 27.8 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதன்மூலம் புலம்பெயர்ந்த இடங்களில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் ஒரே தேசம், ஒரே குடும்பம் அட்டை திட்டத்தின்கீழ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
- கொவிட் பெருந்தொற்று காலத்தில் மட்டும் (ஏப்ரல் 2020 முதல் இதுவரை) ரூ. 36,000 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
- இந்தியா- நேபாள எல்லைப்புற மேலாண்மை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த 12-வது கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
- இந்திய தரப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (எல்லைப்புற மேலாண்மை) மற்றும் நேபாள தரப்பில் அந்நாட்டு உள்துறை அமைச்சக இணை செயலாளர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
- இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நேபாளத்தின் பொக்காராவில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மறு ஆய்வு செய்யப்பட்டது.
- அத்துடன் எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகள், எல்லைப்புற கட்டமைப்பை வலுப்படுத்துதல், அதிகாரமளித்தல் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் திறன் மேம்பாடு, தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- இதையடுத்து, கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டத்தை நேபாளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.