8வது சர்வதேச யோகா தினம்
- 8வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 'மனிதநேயத்துக்கான யோகா (Yoga for humanity)' என்ற கருத்தை மையமாக கொண்டு இந்த ஆண்டுக்கான யோகாதினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னட்டு நாட்டின் 75 முக்கிய இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
- மைசூருவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்பை மற்றும் பொதுமக்கள் 15,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய மல்யுத்தம் - இந்திய வீராங்கனைகள் 4 தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
- கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் நடைபெறும் ஆசிய 17 வயதுக்குட்பட்டோர் மல்யுத்தப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் 4 தங்கம் ஒரு வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.
- முஷ்கன் (40கிலோ), சுருதி (46கிலோ), ரீனா (52கி), சவிதா (61கி) ஆகியோர் அட்டகாசமாக ஆடி தங்கம் வெல்ல, மன்சி பதனா (69கி) வெண்கலம் வென்றார்.
- கிரீக்கோ-ரோமன் பிரிவில் ரோனித் சர்மா (48கிலோ), தங்கம் வென்றார். 110 கிலோ எடைப்பிரிவி பிரதீப் சிங் மற்றும் மோஹித் கோகர் (80கி) வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
- பெண்கள் மல்யுத்தத்தின் ஐந்து எடைப் பிரிவுகளிலும், ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் மூன்று எடைப் பிரிவுகளிலும் மீதமுள்ள போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும். ஜூன் 26ம் தேதி போட்டிகள் முடிவடைகின்றன.
பெங்களூருவில் ரூ.27,000 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பெங்களூரு வந்தார். அங்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ரூ.27,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்
- தவிர பெங்களூருவில் மூளை ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்தார். பின்னர் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், 7 ரயில்வே திட்டங்கள், அண்மையில் திறக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம் தொடர்பான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
- இதையடுத்து மாலையில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தையும், அம்பேத்கரின் சிலையையும் திறந்து வைத்தார்.
21வது சட்டத்திருத்தம் - இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
- இலங்கையில் அரசமைப்பின் 19-ஆவது சட்டத்திருத்தம் ரத்து செய்யப்பட்டு 20ஏ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்திருத்தம் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளவில்லா அதிகாரத்தை வழங்குகிறது.
- இந்நிலையில், 20ஏ சட்டத்திருத்தத்தை நீக்கி, அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்கவும் நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கவும் 21-ஆவது சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- 21-ஆவது சட்டத்திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுமட்டுமின்றி 21ஏ சட்டத்திருத்தத்துக்கும் அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று இலங்கை அரசமைப்பு விவகாரங்கள் துறை அமைச்சா் விஜேதாச ராஜபட்ச தெரிவித்துள்ளாா்.
- 21ஏ சட்டத்திருத்தத்தின்படி, இலங்கை அதிபா், அந்நாட்டு அமைச்சா்கள் நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவா்கள் ஆவாா்கள். அத்துடன் 15 குழுக்கள் மற்றும் மேற்பாா்வைக் குழுக்களும் நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கும்.
- இரு நாட்டு குடியுரிமையைப் பெற்றவா்கள் இலங்கை தோதல்களில் போட்டியிடவும் அந்தச் சட்டத்திருத்தம் தடை விதிக்கிறது.
அப்பல்லோ வங்கதேச இம்பீரியல் மருத்துவமனை புரிந்துணா்வு ஒப்பந்தம்
- வங்கதேசத்தின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான இம்பீரியல் மருத்துவமனையின் நிா்வாக செயல்பாடுகளை அப்பல்லோ மருத்துவக் குழுமம் இணைந்து மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
- சென்னையில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி, இம்பீரியல் மருத்துவமனை தலைவா் ரபியுல் ஹுசேன் ஆகியோா் கையொப்பமிட்டனா்
முதல் முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஆட்சி
- தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அங்கு கடந்த மாதம் அதிபர் தோதல் நடைபெற்றது.
- இதில், இடதுசாரி கட்சியை சோந்த கஸ்டாவோ பெட்ரோ, ரியல் எஸ்டேட் அதிபர் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், 50.48 சதவீத வாக்குகளுடன் கஸ்டாவோ வெற்றி பெற்றுள்ளார். ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா்.
- இதன் மூலம் புதிய அதிபராக கஸ்டாவோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் முதல் முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஆட்சி நடைபெற உள்ளது.
- மேலும் கஸ்டாவோ, அந்நாட்டின் முன்னாள் கிளா்ச்சியாளா் குழுவில் இணைந்து செயல்பட்டவர். இதற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு பின் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.